புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

14 பிப்., 2013



வாக்குறுதிகளைக் காப்பாற்ற இலங்கை தவறிவிட்டது ஐ.நா. குற்றச்சாட்டு

இலங்கையில் ஆயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்ட போரின் இறுதிக்கட்டத்தில் இடம்பெற்ற மோசமான மனிதஉரிமை மீறல்கள் குறித்து விசாரிப்பதாக கொடுத்த வாக்குறுதியை இலங்கை அரசாங்கம் காப்பாற்றத் தவறிவிட்டதாக ஐ.நா மனித உரிமைகள்
ஆணையாளரின் அறிக்கையில் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையில் ஐ.நா மனிதஉரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை சமர்ப்பித்துள்ள 18 பக்க அறிக்கையிலேயே இலங்கை மீது மோசமான குற்றசாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.

போர்க்குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் வாக்குறுதியை நிறைவேற்ற இலங்கை தவறிவிட்டதாகவும் இந்த அறிக்கையில் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

குற்றச்சாட்டுகள் தொடர்பாக உள்ளூர் அதிகாரிகளின் விசாரணைகள் முடிவுறவில்லை என்றும் அது சுதந்திரமானதாகவோ பக்கச்சார்பற்ற வகையிலேயோ மேற்கொள்ளப்படவில்லை என்றும் நிபுணர்கள் கண்டறிந்துள்ளதாகவும் இந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

விசாரணைகள் பாரபட்சமற்ற வகையிலும் நம்பிக்கையளிக்கும் வகையிலும் இடம்பெற வேண்டும் என்றும் இந்த அறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

இலங்கைக்கு கடந்த செப்ரெம்பரில் பயணம் மேற்கொண்ட நிபுணர்குழு உண்மை கண்டறியும் பொறிமுறை ஒன்றை உருவாக்க வேண்டும் என்று இலங்கை அரசிடம் கோரியதாகவும் இந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

17 உதவிப் பணியாளர்களின் படுகொலைகள் உள்ளிட்ட மோசமான மனிதஉரிமை மீறல்கள் குறித்து விசாரணை நடத்தி குற்றவாளிகளை நீதியின் முன் நிறுத்துவதாக இலங்கை அரசாங்கம் வாக்குறுதி அளித்திருந்தபோதும் அது நிறைவேற்றப்படவில்லை.

போரின் இறுதிக்கட்டத்தில் சட்டத்துக்கு முரணானவகையில் இடம்பெற்ற படுகொலைகள் குறித்த குற்றச்சாட்டுகள் தொடர்பான இராணுவ விசாரணைகளில் வெளிப்படைத்தன்மை இல்லை என்றும் இந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

அத்துடன் கடந்த ஆண்டிலும் தொடர்ந்த சட்டத்துக்கு புறம்பான படுகொலைகள் ஆட்கடத்தல்கள் ஆட்கள் கட்டாயமாக காணாமல் போதல்கள் என்பனவற்றுக்கு அவசரமான தண்டனையளிக்கும் பதில் நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என்றும் இந்த அறிக்கை வலியுறுத்தியுள்ளது.

சுதந்திரமான ஊடகங்கள் மீதான தாக்குதல்கள் மனிதஉரிமைச் செயற்பாட்டாளர்கள் மீதான தாக்குதல்கள் சிறைக்கைதிகள் நீதிக்குப் புறம்பாக படுகொலை செய்யப்பட்டது குறித்தும் இந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது
.

ad

ad