புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

4 பிப்., 2013




          தோ இவர்களைப்  பாருங்கள்... இவர்கள் வேறு யாருமல்ல, ஏரியா தலையாரி யும் வி.ஏ.ஓ.வும்தான். இவர்கள் உட்கார்ந்திருக்கும் இடம் திருநெல்வேலி பி.வி.டி தியேட்டரின் ஆபரேட்டர் ரூம் அருகே. வருவாய்த்துறையினரான நக்கீரன் இவர்களுக்கு தியேட்ட ரில் என்னவேலை? என்று திகைக்கவேண்டாம். "விஸ்வரூபம்' படத்தைத் தப்பித்தவறி திரையிட்டுவிடுவார்களோ என்றுதான், காவலுக்கு உட்கார்ந்திருக்கிறார்கள். கமல் ரசிகர் மன்றப் பொறுப்பாளர் கமல் இசக்கியின் தலைமையில் திரண்டிருந்த ரசிகர்கள் "மற்ற விவகாரங்களில் கோர்ட் தீர்ப்பு செயல்படுத்தப்படுகிறதா என்று இதே அரசும் போலீஸும் இதுவரை பார்த்திருக்கிறதா? கமல் மீது மட்டும் ஏன் இவர்களுக்கு இவ்வளவு காட்டம்?'’ என்றனர் எரிச்சலாய்.

சென்னை அண்ணாசாலையில் இருக்கும் தேவி தியேட்டருக்கு அதிகாலையில் வந்த ஒரு கும்பல், விஸ்வரூபம் பட பேனர்களைக் கிழித்து தீவைத்துக் கொளுத்திவிட்டுப் போனது. காலை 10 மணிக்கு இன்னொரு கும்பல் வில்லிவாக்கம் ஏ.ஜி.எஸ்.தியேட்டருக்குள் புகுந்து அங்கிருந்த கேண்டீன்வரை அடித்து நொறுக்கியது. அடுத்து டாடா சுமோக்களில் உருட்டுக்கட்டைகளோடு கிளம்பிய ஒரு கும்பல், வண்ணாரப்பேட்டை பாரத், புரசைவாக்கம் மோட்சம், ராயப்பேட்டை பைலட் ஆகிய தியேட்டர்களுக்குச் சென்றது. காத்திருந்த ரசிகர்களை உருட்டுக்கட்டையைக் காட்டி சிதறி ஓடவைத்தது  கும்பல். 

எழும்பூரில் கமிஷனர் அலுவலகம் அருகே இருக்கும் ஆல்பர்ட் தியேட்டர் முன் 2 பஸ்களில் திரண்டு வந்த ர.ரக்கள், பெரிய முகப்பு கேட் பூட்டியிருந்த தால் கொஞ்ச நேரம் காத்திருந்தனர். பிறகு முகப்புப் பகுதியில் தாக்குதலை நடத்திவிட்டு பூரிப்பாகப் புறப்பட்டனர். 

ஈரோடு வி.எஸ்.பி.தியேட்டரில் 30-ந் தேதி காலை 10 மணிக்கு படம் திரையிடப்பட்டது. 10.40-க்கு போலீஸ் டீம் உள்ளே நுழைந்தது. பலவந்தமாக எல்லோரையும் வெளியே அனுப்பியது. என்ன நடக்கிறது என்று புரியாமல் ரசிகர்கள் குழம்ப, "படத்தைத் திரையிட அனுமதி இல்லை. கிளம்புங்க'’என்றனர் காக்கிகள். கொதித்துப்போன கமல் ரசிகர்களோ "அரசின் அராஜகம் ஒழிக'’என்ற கோஷத்துடன் தியேட்டரில் இருந்து ஊர்வலமாக எம்.ஜி.ஆர்.சிலை சிக்னலுக்கு வந்தனர். அங்கே சாலை மறியலில் குதித்தனர். போலீஸ் படை குவிந்தது. லத்திசார்ஜுக்கு அவர்கள் ஆயத்தமாக, பதட்டம் உண்டானது. அப்போது கமலுக்கு, ஈரோட் டில் தடியடி என்று தகவல் போக, ரசிகர் மன்றத் தலைவர் சந்துரு லைனுக்கு கமலே வந்து "என்ன பிரச்சினை?'’என்று விசாரித்தார். பிறகு ""நாம சட்டரீதியா போராடிக்கிட்டு இருக்கோம். இப்ப மறியல் அது இதுன்னு பண்ணாதீங்க. போலீஸ்காரங்களே ஏதாவது பண்ணிட்டு பழியை நம்ம தலையில் தூக்கிப்போட்டுடுவாங்க. அதனால் அமைதியா கலைந்து போங்க. பார்த்துக்கலாம்''’என சமாதானம் செய்ய, இதன் பிறகே ரசிகர்கள் போலீஸையும், ஜெ.வையும் சபித்தபடி கலைந்து சென்றனர்.

மதுரை பெரியார் பேருந்துநிலையம் அருகில் இருக்கும் ’தங்க ரீகல்’ தியேட்டரில் ரசிகர்கள் காத்திருக்க, தாசில்தார் குணாளனுடன் இன்ஸ்பெக்டர் முருகேசன் உள்ளிட்ட காக்கிகள் மப்டியில் தியேட் டர் வளாகத்திற்குள் வந்தனர். "படத்தைப் போட்டா சீல் வைப் போம்'’என்று அவர்கள் மிரட்டலாகச் சொல்ல, திரண்டிருந்த ரசிகர்கள், மப்டி போலீஸாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது அங்கு வந்த ஏ.சி.கணேசன், "கூட்டத்தை கலையுங்கள்' என்று உத்தரவு போட, லத்திசார்ஜ் செய்து ரசிகர்களை வெளியே விரட்டியடித்தனர். கொந்தளித்துப்போன ரசிகர்கள் அடுத்து என்ன செய்வது? என்று ஆலோசிக்க, உளவுக்காக்கிகளோ, முஸ்லிம் அமைப்புகளைத் தொடர்புகொண்டு, "ஆட்களோடு வாங்க' என்று அழைத்தனர். அடுத்த கொஞ்ச நேரத்தில் பெரும் கூட்டம் அங்கே வர, அவர்களை இன்ஸ்பெக்டரே வாசலில் நின்று வரவேற்றார்.’ ""பிரச்சினை உங்களுக்கும் ரசிகர்களுக்கும்தான். நீங்களே சமாளிச்சிக்கங்க''’என்று சொல்ல, தியேட்டர் முகப்பில் முஸ்லிம் தரப்பினருக்கும் ரசிகர்களுக்கும் இடையில் மோதல் ஏற்படும் சூழல் உருவானது.  கமல் ரசிகர் மன்றத் தலைவர்கள் ரசிகர்களை சமாதானப்படுத்தி மோதலை தவிர்த்தனர். 

வடகோவை மேட்டுப்பாளையம் ரோட்டில் இருக்கும் சென்ட்ரல் தியேட்டரில் ரசிகர்கள் காத்திருக்க, வருவாய்த்துறை அதிகாரிகளோடு வந்த காக்கிகள் "படத்தைத் திரையிடக் கூடாது'’ என்று தடுத்தனர். அப்போது இந்து மக்கள் கட்சித் தலைவர் அர்ஜுன் சம்பத் தனது டீமோடு வந்து "விஸ்வரூபத்தை வெளியிடவேண்டும். தமிழக அரசு கமலை ஏன் பழிவாங்குகிறது?'’ என்றபடி சாலை மறியலில் குதித்தார். அவருடன் கமல் ரசிகர்களும் அமர, பதட்டம் உருவானது. போலீஸ் டீமோ லத்தியோடு அவர் களை அடிக்கப் பாய, கூட்டம் கலைந்து ஓடியது. மேட்டுப் பாளையத்தில் சாலை மறியலில் உட்கார்ந்த ரசிகர்களை லத்தியோடு துரத்திய போலீஸ், அங்கே கமல் படத்தை எரித்த கும்பலை, பரவசமாய் வேடிக்கைப் பார்த்தது.

கன்னியாகுமரி வடசேரி ஸ்ரீகார்த்திகை தியேட்டரில் படம் தடுக்கப்பட்டதைக் கண்ட கமல் ரசி கர்கள் சசி, நாராயணன் ஆகியோர் தலைமையில் கலெக்டரிடம் மனு கொடுக்க ஊர்வலமாகப் புறப்பட்ட னர். அவர்களை கலெக்டர் அலு வலக முகப்பில் தடுத்து நிறுத்திய காக்கிகள் ""யாரைக் கேட்டு ஊர் வலமா வந்தீங்க?''’என்றனர். இதில் இரு தரப்பிற்கும் இடையில் தொ டங்கிய வாக்குவாதம் தள்ளுமுள் ளாக மாறியது. காக்கிகளோ அவர் களில் இசக்கியப்பன் என்ற ரசிகரை அடித்துத் துவைத்து ஸ்டேஷனுக் குக் கொண்டுபோனார்கள். 

கடலூர் 30-ந் தேதி இரவு 7 மணியளவில் ஒரு இஸ்லாமிய அமைப்பைச் சேர்ந்தவர்கள் பெண் கள், குழந்தைகள் சகிதம் கலெக்டர் அலுவலகத்துக்கு அணிவகுத்து வந்தனர். அவர்களை அங்கிருந்த காக்கிகள் தடுத்து, ""என்ன இந்த நேரத்தில் வந்திருக்கீங்க?'' என்று கேட்க ‘""ஆளும் கட்சிப் பிரமுகர் கள்தான் "இப்பவே கிளம்பிப்போய் விஸ்வரூபத்துக்கு எதிரா மனு கொடுங்க'ன்னு சொன்னாங்க. அதான் நாங்க ஆர்கனைஸ் பண் ணிக்கிட்டு வந்திருக்கோம்'' என்ற னர். அப்போது சிறுமிகள், குழந்தை களைப் பார்த்த காக்கிகள்,  ஒரு 10 வயது சிறுமியிடம், "என்ன பாப்பா? நீ எதுக்கு வந்தே?' என்று கேட்க, சிறுமியோ "கமல் படம் வெளியா காமல் இருக்க நான் உயிரையும் விடத் தயார்'’என்று சொல்லி காக்கிகளையே அதிரவைத்தாள். மனு கொடுத்துவிட்டுதான் போ னார்கள். இதைத்தொடர்ந்து 31-ந் தேதி காலை ரவிச்சந்திரன் தலை மையில் கமல் ரசிகர்கள் திரண்டு போய், "படத்துக்கான தடையை நீக்கவேண்டும்' என பதிலுக்கு மனு கொடுத்தனர்.

தமிழகம் முழுவதும் இதே டென்ஷன்தான். தியேட்டர்களை தாக்கியவர்கள் முஸ்லிம் அமைப் பைச் சேர்ந்தவர்கள் அல்ல என் பதே ரசிகர்கள் சொல்லும் உண்மை.

-நமது நிருபர்கள்

ad

ad