புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

4 பிப்., 2013





          ட்டம்- ஒழுங்கு பிரச்சினைக் காகத்தான் கமல் படத்துக்கு தடை விதிக்கப்பட்டது என "ஜெ.' பேட்டி யளித்தார்.நக்கீரன் 

ஆனால், நம்மிடம் பேசிய கோட்டை அதி காரிகளோ ""துப்பாக்கி படத்திற்கு எதிராக முஸ்லிம் அமைப்புகள் உள்துறை செயலாளர் ராஜ கோபாலை சந்தித்து படத்தை தடை செய்ய வேண்டுமென்று முறையிட்ட போது, படத்தின் தயாரிப்பாளர் தாணு, இயக்குநர் முருகதாஸ், நடிகர் விஜய் உள்ளிட்டவர் களை அழைத்துப் பேசினார் ராஜகோபால். அப்போது "பிரச்சினையை தீர்க்க சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்கிவிடுங்களேன்' என்று ராஜகோபால் அறிவுறுத்த, அதற்கு ஒப்புக்கொண்டு நீக்கினர். பிரச்சினை ஒரே நாளில் முடிவுக்கு வந்தது. அதே மாதிரி விஸ்வரூபம் பிரச்சினை வந்தபோதும் கமல் தரப்பினரை அழைத்து சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்குவது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தி யிருக்க வேண்டும். ஆனால் அதை செய்யவில்லை'' என்று சுட்டிக் காட்டுகிறார்கள்.

அப்போது கொடநாட்டிலிருந்து சென்னைக்கு ஜெ. கிளம்பிய நாளில்  ""மதியம் 2 மணிக்கு முதல்வர் சென்னைக்கு வந்துடுவாங்க. சட்டம்- ஒழுங்கு குறித்து விவாதிக்கவிருக்காங்க. உயரதிகாரிகளை வரச்சொல்லிடுங்க'' என்று ராஜகோபா லுக்கு தலைமைச்செயலாளர் ஷீலாபால கிருஷ்ணன் தகவல் தெரிவித்தார். அதன்படி மதியம் 3.30-க்கு கோட்டையில் முதல்வரின் செக்ரட்டரிகள், தலைமைச்செயலாளர், உள்துறை செயலாளர், காவல்துறை தலைவர், உளவுத் துறை ஐ.ஜி., சென்னை போலீஸ் கமிஷனர், அட்வகேட் ஜெனரல் (சட்டம்- ஒழுங்கு பற்றி விவாதிக்க ஏ.ஜி. எதற்கு?) உள்ளிட்டவர்களோடு தமிழகத்தின் சட்டம்-ஒழுங்கு குறித்து விவாதித்தார் ஜெயலலிதா. தமிழகத்தின் சட்டம்- ஒழுங்கு என்று சொல்லப்பட்டாலும் விஸ்வரூபம் படம் குறித்து மட்டுமே விவாதிக்கப்பட்டது.

அந்த விவாதம் குறித்து விசாரித்த போது,’’""பல்வேறு காட்சிகள் இஸ்லாமியர் களை தீவிரவாதிகளாக சித்தரித்திருக்கிறார் கமல். படம் ரிலீஸானால் தியேட்டர்கள் முன் ஆர்ப்பாட்டம் நடத்துவோம்னு முஸ்லிம் தலைவர்கள் புகார் கொடுத் திருக்கிறார்கள். அவர்களின் ஆவேசம் கடுமையாக இருக் குது'' என்று உள்துறை செயலாளர் விவரிக்க, சென் னை போலீஸ் கமிஷனர் ஜார்ஜ், ""படம் ரிலீஸானால் 100 முஸ்லிம்கள் ஒவ்வொரு தியேட்டரிலும் நுழைந்து தாக்குதல் நடத்துவார்கள். அது சட்ட- ஒழுங்கு பிரச் சினையை ஏற்படுத்தும். ரிலீஸுக்கு முன்பு தடை கொடுப்பதன் மூலம் லா. அண்ட் ஆர்டரை பாது காக்க முடியும்'' என்று சொல்ல, ""அப்படின்னா 2 வாரத்துக்கு படத்தை திரை யிட தடை கொடுத்திடுங்க'' என்று ஜெயலலிதா உத்தர விட்டார். "ஜெ.'வின் மனதறிந்து இந்த இரண்டு அதிகாரிகள் மட்டும் பேசினார்கள்.

ஆக, படத்திற்கு தடை விதிக்க வேண்டு மென்பதில்தான் அரசு தரப்பு முழு வீச்சாக இருந்தது. இதனையடுத்து, அரசு எதிர்பார்த்தது போல் தடையை எதிர்த்து கோர்ட்டுக்கு போனார் கமல். படத்தை பார்த்த நீதிபதி வெங்கட்ராமன், "இருதரப்பும் மீண்டும் பேசி சுமுக தீர்வை காணுங்கள்' என்று சொன்ன தோடு தீர்ப்பை மறுநாளுக்கு ஒத்தி வைத்தார். உடனே, முஸ்லிம் கூட்டமைப்பின் தலைவர்கள் சிலர் அதிகாரிகளிடம் இதனை சுட்டிக்காட்டினர்.  

இதை அறிந்த ஆட்சி மேலிடம், ஓ.பி.எஸ்.க்கு சில உத்தரவுகளை பிறப்பிக்க அவரோ முஸ்லிம் லீடர்கள் சிலரிடம் "தடை கோரும் விஷயத்தில் உறுதியாக இருங்கள்' என்று அறிவுறுத்தினார்.

நீதிபதி வெங்கட்ராமன் அரசு தடைக்கு தடை விதித்ததால் டென்ஷனான மேலிடம், இரவோடு இரவாக போலீஸுக்கு சில இன்ஸ்ட் ரக்ஷன்களை கொடுத்தது. அதேபோல, அ.தி.மு.க. மா.செ.க்களுக்கும் சில உத்தரவுகள் பறந்தன. மறுநாள் தமிழகமெங்கும் திரையிடப்பட்ட பல தியேட்டர்களில் படம் ரிலீஸ் ஆக, அ.தி.மு.க.வி லுள்ள முஸ்லிம்கள் போலீஸ் துணையுடன் சென்று படத்தை நிறுத்துமாறு தியேட்டர் உரிமையாளர்களிடம் மல்லுக்கட்ட, இதற்கு எதிர்ப்பு தெரிவித்த ரசிகர்களுக்கும் அ.தி.மு.க. முஸ்லிம்களுக்கும் மோதல் வெடித்தது.

மொத்தத்தில் விஸ்வரூபத்துக்கும் முஸ்லிம் அமைப்புகளுக்குமாக இருந்த பிரச்சினை அரசுக்கும் கமலுக்குமான விவகாரமாக விஸ்வரூபமெடுத்ததுதான் உண்மை.  

-ஆர்.இளையசெல்வன்

 வாதாடியவர் வீட்டில் விஜிலென்ஸ்!

விஸ்வரூபம் படத்திற்கு எதிராக கோர்ட்டில் அரசு வைத்த வாதத்திற்கு எதிராக கமலின் சீனியர் வழக்கறிஞர் பி.எஸ்.ராமன் கடுமையாக எதிர்வாதம் வைத்தார். இந்த சூழலில், 30-ந்தேதி மதியம் பி.எஸ்.ராமனின் வீட்டிற்கு மின்சார வாரியத்தின் விஜிலென்ஸ் அதிகாரிகள் 6 பேர் சென்றனர். 

மேற்கொண்டு நடந்ததை பி.எஸ்.ராமனின் மேனேஜர் ஆறுமுகம் சொல்கிறார்.  ""எவ்வித அறிவிப்புமில்லாமல் உள்ளே நுழைந்தார்கள். "மின் திருட்டு நடக்கிறது, அதனால் மின் இணைப்பை துண்டிக்க வந்துள்ளோம்' என்றார்கள். உடனே நான், "மின் கட்டணம் மட்டுமே ரூ.1 லட்சத்திற்கு மேல் கட்டுகிறோம். எதுவாக இருந்தாலும் நோட்டீஸ் கொடு, அதை நாங்க ஃபேஸ் பண்ணுறோம்' என்று நான் கேட்க, அதற்கு அவர்கள், "இப்ப போறோம், மீண்டும் வருவோம்' என்று எச்சரிக்கை செய்துவிட்டு போனார்கள். எங்க ராமன் சாரோட அப்பா பட்டாபி ராமன். அ.தி.மு.க. தலைமை அலுவலகத்திற்காக தனது இடத்தை எம்.ஜி.ஆருக்கு கொடுத்தவர். அதற்கு எம்.ஜி.ஆர்., "இந்த இடத்திற்கு எவ்வளவு பணம் தரணும்' என்று கேட்க, "உங்களிடம் போய் நான் பணம் கேட்பதா?' என்று சொல்லி அந்த இடத்தை இலவசமாகவே தந்தவர். மேலும், அ.தி.மு.க. கட்சியின் சட்டவிதிகளை வகுத்துக் கொடுத்ததே பட்டாபிராமன்சார்தான்'' என்று பழைய விவரங்களையும் சுட்டிக்காட்டினார் ஆறுமுகம்.

ad

ad