புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

4 பிப்., 2013




""ஹலோ தலைவரே... ஒரு வழியா விஸ்வ ரூபம் படம் பற்றி ஜெ. வாய் திறக்க, அடுத்தடுத்த நடவடிக்கைகள்னு வேகம் எடுத்திடிச்சே..''
நக்கீரன் 

""இந்த விவகாரம் தொடர்பா ஜெ.வை வாய் திறக்க வைத்த பெருமை கலைஞருக்கும் கமலுக்கும் தான் சேரும்.''

""நீங்க சொல்றது சரிதான்.. கோட்டை வட்டாரத்தில் கூடுதலா ஒரு செய்தி சொன்னாங்க. மத்திய அரசு காட்டுன திடீர் வேகம்தான் ஜெ.வை பேட்டி கொடுக்க வைத்ததாம். மத்திய அரசின் சென்சார் போர்டு தணிக்கை செய்த ஒரு படத்துக்கு தமிழக அரசு தடை போட்டு, அதை நீடிக்கச் செய்யணும்ங்கிறதில் தீவிரமா இருந்தது பற்றி மத்திய அரசுக்கு நிறைய ரிப்போர்ட் போயிருக்கு. நிதியமைச்சர் ப.சிதம்பரம் அப்போ ஜெர்மனியில் இருந்திருக்காரு. அவருக்கும் தகவல் போய்ச் சேர்ந்திருக்கு''.

""என்ன சொன்னாராம்.''


""கமல் ஒரு நல்ல கலைஞர்னு சொன்ன ப.சி., அவர் இந்து மதத்துக்கு எதிராகக்கூட சில கருத்து களை சொல்லுவாரு. ஆனா, முஸ்லிம்களுக்கு எதிரா படம் எடுக்கமாட்டாரே.. ஒரு வேளை நம்ம விழாவில் கலந்துக்கிட்டதுதான் தடைக்கு கார ணமா? சென்சார் சர்டிபிகேட் வாங்கியிருக் காருல்ல.. அப்புறம் எப்படி மாநில அரசு தடை விதிக்கமுடியும்னு கேட்ட ப.சி., அதற்கப்புறம் இது தொடர்பாக மத்திய தகவல் ஒலிபரப்புத் துறை மந்திரி மணீஷ் திவாரிகிட்டேயும் பேசியிருக்காரு.''

""மாநில அரசின் தடை, சுப்ரீம் கோர்ட் தீர்ப்பை மீறுவதா இருக்கக்கூடாதுன்னு மணீஷ் திவாரி கிட்டேயிருந்துதானே முதல் எச்சரிக்கை வந்ததே..''

""போன புதன்கிழமையன்னைக்கு டெல்லிக்கு ரிட்டர்ன் ஆனார் .ப.சி. அன்னைக்குத்தான் கமல் உருக்கமா பேட்டி கொடுத்தாரு. அதைப் பற்றி ப.சி.கிட்டே கார்த்தி சிதம்பரம் சொன்னதோடு, "நம்ம ஃபங்ஷனில் கமல் கலந்துக்கிட்டதும் அவரோட நெருக்கடிக்கு ஒரு காரணம்'ங்கிறதையும் சொல்லி யிருக்காரு. இதையடுத்து, உள்துறை அமைச்சர் ஷிண்டேகிட்டே ப.சி. பேச, ஒவ்வொரு கலைஞனுக்கும் கருத்து சுதந்திரம் இருக்குன்னும் அதை யாரும் தடுக்க முடியாதுன்னும் மாநில அரசிடம் மத்திய அரசு விளக்கம் கேட்கும்னும் ஷிண்டே சொன்னாரு. மணீஷ் திவாரியும், தணிக்கைச் சட்டத்தை சீர்திருத்தி, மாநில அரசுகள் அதை மீறாமல் இருக்கும்படி செய்வதற்கான நேரம் வந்துவிட்டதுன்னு பேட்டி கொடுத்தாரு.  கவர்னர் மூலமா மத்திய அரசு ரிப்போர்ட்டும் கேட்டிருக்கு.''

""இதெல்லாம் ஜெ.வின் கவனத்துக்கு வந்திருக்குமே..'' 

""ஆமாங்க தலைவரே.. அதோடு கமலின் உருக்கமான பேட்டி ஏற்படுத்துன தாக்கம், தடையின் அரசியல் பின்னணி பற்றி கலைஞர் எழுதுன கடிதம் எல்லாம் சேர்த்துதான் ஜெ.வை பேட்டி கொடுக்க வைத்தது. ஜெயா டி.வி. ரைட்ஸ்க்கும் தனக்கும் எந்த சம்பந்தமுமில்லைன்னும் ஜெயா டி.வி.யில் தனக்கு எந்த ஷேரும் இல்லைன்னும் ஜெ. பேட்டி கொடுத்துக்கிட்டி ருக்கும்போது அவர் முன் னாடி ஜெயா டி.வி. மைக் மட்டும்தான் அனுமதிக்கப் பட்டிருந்தது. கமல் மீதே குற்றச்சாட்டுகளை அடுக் கிய ஜெ., சட்டம்-ஒழுங் கைக் காக்கத்தான் இந்த தடை நடவடிக்கைன்னும் ஒரு சினிமாவை தடை செய்ய மாநில அரசுக்கு அதிகாரம் இருக்குன்னும் கமலும், தடை கோரிக்கை வைத்த முஸ்லிம் அமைப்புகளும் சேர்ந்து பேசி சுமுக முடிவு கண்டால், மாநில அரசு ஏற்கும்னும் சொன்னார். அப்புறம்தான், ஒருவழியா விஸ்வரூபம் விவகாரம், சுமுகப் பேச்சுவார்த்தை நோக்கி நகர்ந்தது. எதையும் விட்டுக் கொடுக்காதீர்கள் என்று போராடுபவர்களிடம் அரசு தரப்பு சொல்லியும் வருகிறது.''

""விஸ்வரூப சினிமா விவகாரம் ஒரு பக்கம்னா, தி.மு.க.வில் அழகிரி பிறந்த நாள் போஸ்டர் இப்படி விஸ்வரூப மெடுத்திடிச்சே.''…

""தலைவரே.. போன முறையே நாம் இதைப் பற்றி பேசினோம். அந்த போஸ்டர் விவகாரம் தி.மு.க தலைமையை ரொம்ப கோபப்படுத்தியிருந்ததையும் சொல்லியிருந்தோம். மத்திய அமைச்சர் பதவி இருப்பதாலதான் இப்படி நடந்துக்கிறாரான்னு கலைஞர் கோபமா கேட்டாராம். ஜனவரி 30-ந் தேதி அழகிரியோட 62-வது பிறந்தநாள்.  வழக்கத்தைவிட கொஞ்சம் லேட்டாகத்தான் போனில் கலைஞரின் வாழ்த்து செய்தி வந்ததாம். அதன்பிறகே, குடும்பத்தாரோடு கேக் வெட்டினார் அழகிரி. மனைவி, மகன், மருமகள் எல்லோரும் இருந்தாங்க. ஆனா மகள்களும் அவங்க குடும்பமும் அங்கே இல்லை.'' 

""அரசியல்வாதிகளின் பிறந்தநாள்னா கட்சிக் காரர்களோட வருகைதானே முக்கியம். அதுவும் தி.மு.க.வோட தென்மண்டல அமைப்புச் செயலாளரான மத்திய அமைச்சர் அழகிரிக்கு பிறந்தநாள்னா மண்டலமே அதிர்ந்திருக்குமே.''…


""அவரோட மண்டலத்துக்குள்ளே மதுரை மாநகர் மா.செ. தளபதி, புறநகர் மூர்த்தி, திண்டுக்கல் ஐ.பெரியசாமி, சிவகங்கை பெரியகருப்பன், ராமநாதபுரம் சுப.தங்கவேலன், விருதுநகர்  கே.கே.எஸ்.எஸ்.ஆர்., தேனி மூக்கையா, திருநெல்வேலி கருப்பசாமிபாண்டி யன், தூத்துக்குடி பெரியசாமி, கன்னியாகுமரி சுரேஷ் ராஜன் இத்தனை மா.செ.க்கள் இருக்காங்க. ஆனா, புறநகர் மூர்த்தி, தேனி மூக்கையா இருவரைத் தவிர வேறெந்த மா.செ.வும் நேரில் வரலை. மைதீன்கான், தங்கம் தென்னரசு, ஆவுடையப்பன் போன்ற தென்மாவட்ட முக் கியஸ்தர்களும் வரலை. இத்தனைக்கும் பல பேருக்கு போன் போட்டு சிலர் ஞாபகப் படுத்தினார்கள். பலரும் மு.க.ஸ்டாலினின் வார்த்தைக்காக வெயிட் பண்ணிக்கிட்டிருந்திருக் காங்க. டெல்லி ட்ரிப் முடித்து திரும்பி வந்த ஸ்டாலின் நேரிலும் வரலை. போனிலும் பேசலை.'' 

""குடும்பத்திலிருந்து ஆட்கள் வந்திருப் பாங்களே..''

""இயக்குநர் அமிர்தத்தைத் தவிர  வேறு யாரும் வரலை. தொண்டர்கள் கூட்டமும் ரொம்ப சுமார்தானாம். அதிலும் சில பேர், எங்களுக்கு காசு கொடுத்து கூட்டிக்கிட்டு வந்தாங்கன்னு மீடியாக்கள்கிட்டே உளறிட்டாங் களாம். அழகிரி பிறந்தநாளுக்கு முன்னாடியே வந்து முடியும்வரை இருந்தவர்கள் அந்த பரபரப்பு போஸ்டர்களை ஒட்டிய ஜி.வெங்கட் ராமனும் அவரோட மகனான ஜி.வி.ரமணா வும்தான். போஸ்டர் விவகாரம் பற்றி கலைஞர் கொடுத்த அறிக்கையில், மாயமான்கள்-மாரீச மான்கள் என்று குறிப்பிட்டிருப்பது இவர் களைத்தான்.'' 

""கட்சிக்கு குழிதோண்ட நினைத்தவர்கள் யாரும் நிலைத்ததில்லைன்னு சொன்ன கலைஞர், இந்தப் போஸ்டர்களுக்கும் தன் மகன்களுக்கும் சம்பந்தமில்லைன்னும் சொல்லியிருக்காரே.''…

""ஆமாங்க தலைவரே.. இந்த போஸ்டர் விவகாரம் கலைஞரை டென்ஷனாக்கியிருப்பதை அழகிரிகிட்டே  கே.பி.ராமலிங்கம் எம்.பி பக்குவமா எடுத்துச் சொல்லி, தலைமை மனம் நோகும்படி நடந்துக்கவேணாம்னு சொல்லியிருக்காரு. அழகிரி கிட்டே பதில் இல்லையாம். போஸ்டர் பரபரப்புக்கு இடையே, பிறந்தநாளுக்கு நேரில் வாழ்த்த வந்த ஒருத்தர், பரிசாக துப்பாக்கி ஒன்றைக் கொண்டு வந்திருக்காரு. ஆனா, அழகிரி தரப்பு அதை வாங்கலை. கொண்டு வந்தது யாருன்னு போலீஸ் இப்ப தேடிக்கிட்டிருக்காம்.''

""டெசோ டீம் டெல்லி போய்விட்டுத் திரும்பி வந்திருக்கே.. ஏதாவது முன்னேற்றம் உண்டா?''

""ஐ.நா. மனித உரிமை ஆணையத்தில் டெசோ தீர்மானங்களை வலியுறுத்து வது தொடர்பா முதற் கட்டமா அமெரிக்கா, ரஷ்யா, இத்தாலி, மலேசியா, எஸ்டோனியா, மான்ட்டி நீக்ரோன்னு 6 நாட்டுத் தூதர்களை டெல்லியில் சந்திச்சுது இந்த டீம். எல்லா நாட்டுத் தூதர்களுமே, இலங்கைப் பிரச்சினையில் இந்தியாவோட நிலையைத் தெளிவுபடுத்தச் சொல்லுங் கன்னு கேட்டிருக்காங்க. இலங் கைக்கு ஆதரவா செயல்படும் ரஷ்யாவின் தூதர், உங்க கோரிக்கைகளை நிச்சயம் பரிசீலிக்கிறோம். நீங்க இந்தியாவின் நிலையை தெரிந்துகொள்வதோடு, சைனாவை சரிபண் ணுங்க. அப்பதான் நிலைமை மாறும்னு சொல்லியிருக்காரு. ஆனா, சைனா தூதரகம் அப்பாயிண்ட்மென்ட் கொடுக்கலை. அப்புறம், நம்ம ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி யையும் டெசோ டீம் சந்தித் தது. அவர் எல்லாவற்றையும் கேட்டுவிட்டு, இந்தியாவுக்கு இருக்கிற சிக்கல்களையும் சொன்னாராம்.'' 

""ஜனாதிபதியின் அதிகாரம்தான் தெரிஞ்சதாச்சே!''

""டெசோ பற்றி நான் ஒரு தகவல் சொல்றேன்... பிப்ரவரி 4-ந் தேதி டெசோ கூட்டம் நடக்குது. ராஜபக்சே இந்தியா வரும் திட்டம் இருப்பதால் அதற்கெதிரான நடவடிக்கை பற்றி ஆலோசிக்கப் படுமாம். ஏற்கனவே சென்னையில் நடந்த மாநாட்டில் கலந்துக்கிட்ட ராம்விலாஸ்பஸ்வான் போன்ற வடநாட்டுத்தலைவர்கள், டெல்லி யில் ஒரு மாநாடு நடத்தி வட இந்திய அரசியல்  தலைவர்களின் கவனத்தை கவருங்கள்னு சொன்னாங்க. அப்படி ஒரு முடிவெடுத்தா நல்லாயிருக்கும்.''

 லாஸ்ட் புல்லட்!

தே.மு.தி.க எம்.எல்.ஏக்கள் 8 பேருக்கு உரிமைமீறல் நோட்டீஸ் அனுப்பியிருந்தார் சபாநாயகர். நமது நக்கீரன்  மீதான வழக்கில் நீதிமான் சந்துரு அளித்த தீர்ப்பின்படி, நாங்களும் எங்கள் வழக்கறிஞர்கள் துணையுடன்தான் இந்த உரிமை மீறலுக்கு பதிலளிப்போம் என சபாநாயகரிடம் கடிதம் கொடுத்துள்ளனர் 8 எம்.எல்.ஏ.க்களும்.

உயர்நீதிமன்ற தீர்ப்பையடுத்து, புதிய தலைமைச் செயலகத்தை அவசர அவசரமாக மருத்துவமனையாக்கியிருக்கிறது ஜெ அரசு. இந்த மாற்றத்திற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுவையும், அரசின் கொள்கை முடிவில் தலையிடமுடியாது எனச் சொல்லி தள்ளுபடி செய்துவிட்டார் தலைமை நீதிபதி. சென்னை  ஜி.ஹெச்சுக்கு வரும் நோயாளிகளை ஆம்புலன் ஸில் ஏற்றி புதிய தலைமைச் செயலகத்தில் திறப்புவிழா காணாமல் இயங்கும் பல்நோக்கு மருத்துவமனைக்கு கொண்டு வந்து ட்ரீட்மெண்ட் தருகிறார்கள். வரும் நோயாளிகளோ, கலைஞர் கட்டுன ஆஸ்பத்திரி என்கிறார்கள் கட்டிடத்தைப் பார்த்து.

புதுவையில் ரெங்கசாமி அமைச்சரவையில் கல்வி மந்திரியாக இருந்த கல்யாணசுந்தரம், கடந்த ஆண்டு ஆள்மாறாட்டம் மூலம் 10ஆம் வகுப்புத் தேர்வை எழுதினார். இதை நக்கீரன்தான் அம்பலப்படுத்தியது. இதைத் தொடர்ந்து அவரது அமைச்சர் பதவியும் பறிபோனது. இந்த ஆள்மாறாட்டத் தேர்வு வழக்கை திண்டிவனம் குற்றவியல் நீதிமன்றம் விசாரித்து வந்தது. இந்த நிலையில் 31-ந்தேதி இந்த வழக்கில் தீர்ப்பளித்த மாஜிஸ்திரேட் சரிதா, ஏ-1 குற்ற வாளியான கல்யாண சுந்தரத்திற்கு 4 ஆண்டு சிறைத் தண்டனையும், 5 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதிப்பதாக அறிவித்தார். கல்யாண சுந்தரத்தின் தவறுகளுக்கு உடந்தையாக இருந்த ஆதவன், ரஜினிகாந்த் ஆகியோருக்கு தலா 2 வருட சிறைத் தண்டனையும் தலா 5 ஆயிரம் அபராதமும் விதித்திருக்கிறார்.

சென்னை விமான நிலையத்தின் விரிவாக்கப்பட்ட உள்நாட்டு முனையத்தை துணை ஜனாதிபதி ஹமீது அன்சாரி திறந்து வைத்தார். துணை ஜனாதிபதியை மரபுப்படி வரவேற்ற ஜெயலலிதா, உள்நாட்டு முனையத்திற்கு எம்.ஜி.ஆர். பெயர் வைக்க மத்திய அரசு அறிவிப்பு செய்யாததைக் கண்டித்து விழாவை புறக்கணித்திருக்கிறார்.

ad

ad