புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

29 மார்., 2013


தமிழக முதல்வரால் சட்டசபையில் கொண்டுவரப்பட்ட தீர்மானம்ஈழத்தமிழினத்துக்கு விடிவை கொண்டுவருமா…?– ஒரு பார்வை.

 சில வருடங்களுக்கு முன்னர்,விடுதலைப்புலிகளை நியாயத்துக்குப்புறம்பாகவும்,(இரசாயன ஆயுதங்கள் மற்றும்துரோகி கருணாவால்)வஞ்சகமாகவும் அழித்தஇலங்கையின் இராணுவத்தளபதியும்தற்போது அரசுக்கு எதிராக இயங்குபவருமானசரத் பொன்சேகாவிடம்
தமிழக அரசியல்வாதிகளைப்பற்றிய ஒரு கேள்வி பத்திரிகையாளர் ஒருவரால்கேட்கப்பட்டதற்குஅவர் சிரித்துக்கொண்டு “தமிழகஅரசியல்வாதிகள் கோமாளிகள்” என்றார்.
அதை இல்லையென்று நிரூபித்துள்ளார் தமிழகமுதல்வர்.

தமிழ்நாட்டு சட்டசபையில்முதல்வர் ஜெயலலிதாவால் கொண்டுவரப்பட்ட’இலங்கைக்கு எதிரான தீர்மானம்’ மிகுந்ததன்னம்பிக்கையை கொடுக்கிறது.

இதைப்பற்றி பலர்பலவிதமாக கருத்துக்கூறலாம்.

அரசியல் நடிப்பு,கலைஞரை பழிவாங்க இப்படிச்செய்தார்,வரும் தேர்தலில் ஓட்டுக்களை எடுப்பதற்காக இப்படிச்செய்கிறார் என்றுகூட சொல்லுவார்கள்.

ஆனால்எவர் என்னசொன்னாலும்,என்ன காரணத்துக்காகஎடுக்கப்பட்டாலும், காலம்தாழ்த்தி எடுக்கப்பட்டாலும்இது ஒரு மிகச்சரியான தீர்மானம்.

இந்த தீர்மானத்தில் முக்கியமானதுஇதில் பாவிக்கப்பட்டுள்ள வார்த்தைப்பிரயோகங்கள்.இதில்இலங்கையில் நடந்ததுஒரு இனப்படுகொலை
(It is a GENOCIDE ) என்று முதல்வர்கூறியிருப்பது இலேசுப்பட்ட விடயமல்ல.

இதே வார்த்தைப்பிரயோகத்தைசிலவாரங்களுக்கு முன்பும் கவர்னர்உரைக்கு அடுத்துமுதல்வர், ஈழத்தமிழர்பற்றி உரையாற்றிய போது உபயோகித்திருந்தார்.

Genocide என்கிற இனப் படுகொலை என்றால்என்ன ??? Genocide is foremost an internationalcrime for which individuals, no matter how high inauthority, may be indicted, tried, and punished bythe International Criminal Court (ICC). According toArticle 6 of the ICC Statute, This crime involves, “anyof the acts committed with intent to destroy, in wholeor in part, a national, ethnical, racial or religiousgroup(http://www.genocidewatch.org/aboutgenocide/8stagesofgenocide.html)

இனிமேல் உலக அரங்கில் ராஜதந்திர மட்டத்தில்இலங்கையை காடுமிராண்டிகளைப்போன்றுபார்க்கப்போகிறார்கள்.

இலங்கைக்கெதிரான இந்த வார்த்தைப்பிரயோகம்பலரை திரும்பிப்பார்க்கவும்,சில அரசுகளை இதே போன்றதொரு தீர்மானத்தை இலங்கை அரசுக்கு எதிராகஎடுப்பதற்கு தூண்டுகோலாகவும்அமையக்கூடும்.ஒரு அரசு,குறிப்பிட்ட மொழி, மதம், அல்லது இனம் காரணமாகஅந்த மக்களை கொன்றுகுவிப்பதைஇனப்படுகொலை என்று அழைக்கிறார்கள்.

வரலாற்றில்மிகக்கொடியவனாகவும், கெட்டவனாகவும்இடம்பிடித்துள்ள ஹிட்லர்,யூதர் என்ற ஒரு இனமே உலகில் இருக்கக்கூடாது எனதீர்மானித்துலட்சக்கணக்கானஅப்பாவி யூதர்களைஉலகப்போரின்போது கொன்றுகுவித்தான்.

அன்றிலிருந்து உலகில்எந்த மூலையில்ஜேர்மனியர்களைக்கண்டாலும்அவர்களைஇனத்துவேஷம் பிடித்தவர்கள் என்றகண்ணோட்டத்துடனேயே மக்கள் பார்க்கின்றனர்.

தமக்கு ஏற்பட்டஅந்த கெட்ட இமேஜைகுறைப்பதற்குபல வருடங்களாக ஜேர்மனி படாதபாடுபடுகின்றது.பிராயச்சித்தம் செய்கின்றது.

அப்படிப்பட்ட ஒரு பிராயச்சித்தம்தான் உலகின்அடக்கப்படும் நாட்டிலிருந்துஉயிரைக்காப்பாற்றதப்பியோடிவரும் மக்களுக்கு’அகதி’ அந்தஸ்துகொடுப்பது.

இப்படியாகஜேர்மனி எத்தனையோ நல்லகாரியங்களைஇன்றளவும்செய்துகொண்டிருந்தாலும்அவர்கள்இனத்துவேஷிகள் என்ற எண்ணம்உலக மக்கள் மனதிலிருந்து இன்னும் மாறவில்லை.

அதே போன்றதொரு நிலைதான் இனிவரும்காலங்களில்ராஜ பக்சே சகோதரர்களுக்கும்,இனவெறிபிடித்த இலங்கை அரசுக்கும் ஏற்படப்போகின்றது.

இனி வரப்போகும் உலக வரலாற்றின் பக்கங்களில்ஹிட்லரைப்போலராஜபக்சேயின் பெயர்இனத்துவேஷி என்றும், ஃபாசிஸ்ட், கொலைகாரன்என்றும் இருக்கப்போகின்றது.

இது,அவனுக்கும்அவனது சந்ததிக்கும் கிடைத்துள்ள தீர்க்கமுடியாதஅவமானம்.அதற்கு பிள்ளையார்சுழி போட்டுள்ளது இந்தத்தீர்மானம்.

முதல்வரின் தீர்மானத்தில் காணப்படும்இன்னொரு சொற்பதம்இலங்கைக்கு எதிராகபொருளாதாரத்தடையைஇந்தியாவின் வழிகாட்டலில்உலக நாடுகள் செயற்படுத்த வேண்டும்.

இதுவும் உலகின் ராஜதந்திர மட்டத்தில்ஒரு பாரதூரமான சொற்பதம்.

சென்ற நூற்றாண்டில்பெரும்பான்மை கருப்பர்களை அடக்கிசிறுபான்மை வெள்ளையினத்தவர்ஆட்சிசெய்த நாடு தென்னாபிரிக்கா.

இதற்கெதிராகபோராடிய நெல்சன்மண்டேலாவை’பயங்கரவாதி’ என பொய்க்குற்றம்சுமத்தி ஏறக்குறைய 3 தசாப்தங்களாக சிறையில்வாட்டியது தென்னாபிரிக்கா.

ஆனால்அங்கு நடப்பது ஒரு இனவெறிபிடித்தஆட்சி என்றும்,அங்குள்ள வெள்ளையினத்தவரால்கறுப்பர்கள் அடக்கப்படுகிறார்கள் என்பதும்வெளிவந்தவுடன் உலக நாடுகளெல்லாம்தென்னாபிரிக்காவுக்கு எதிராக பொருளாதாரத்தடையை விதித்தனர்.

சர்வதேச கிரிக்கட் அணிகள்தென்னாபிரிக்காவுடன்விளையாடுவது தடைசெய்யப்பட்டுஅந்த நாடு கொஞ்சம் கொஞ்சமாகஉலகிலிருந்து தனிமைபடுத்தப்பட்டுப்போனது.

தென்னாபிரிக்க மக்கள் உலகத்துக்கு அன்னியர் ஆகிப்போனார்கள். ஒருவருடமல்ல இருவருடமல்ல பலவருடங்கள்சர்வதேசத்தடையும் ராஜதந்திரஅழுத்தங்களும் கொடுக்கப்பட்டது.

விளைவு,காலப்போக்கில் உலகை எதிர்த்து தனியனாக நிற்கமுடியாததைஉணர்ந்துகொண்டதென்னாபிரிக்கா வழிக்கு வந்தது.

சிறையில்அடைத்திருந்த மண்டேலாவை விடுவித்ததுடன்அடுத்து வந்த தேர்தலில் கருப்பர்களிடம் ஆட்சிப்பதவியை கொடுக்க முன்வந்தது.

தேர்தலில்போட்டியிட்டு அமோக வெற்றியீட்டிய மண்டேலா,தென்னாபிரிக்காவின் முதல்கறுப்பு ஜனாதிபதியானார்.

அதன் பின்தென்னாபிரிக்காவுக்கு எதிரான உலகின்தடைகளெல்லாம் நீக்கப்பட்டு கிரிக்கட்டும்விளையாடப்பட்டது.

இன்று தென்னாபிரிக்காவில்இன்வெறி ஆட்சியில்லை.கிரிக்கெட்டிலும் மிகச்சிறந்த வீரர்கள் அங்கிருந்துதான் உருவாகிறார்கள்.

பொருளாதாரத்தடையென்றஒன்று அமுல்படுத்தப்படும் பட்சத்தில்I.C.C.யால்இலங்கைக் கிரிக்கெட் குழுவுக்கு,வேறு நாடுகளுடன் கிரிக்கெட் விளையாடுவதற்கு,சர்வதேசத்தடை விதிக்கப்படும்.இதன் காரணமாகஇலங்கையுடன் விளையாட எந்தவொரு நாடுகளும்முன்வரா.

ஆக,இலங்கைக்கு எதிராகபொருளாதாரத்தடையென்ற ஒன்று சர்வதேச மட்டத்தில் விவாதிக்கப்படுவதற்குக் காரணமும்இந்தத்தீர்மானமே.

இலங்கைஒரு இனவெறிபிடித்த நாடு என்றும்,அதற்கெதிராக பொருளாதாரத்தடை விதிக்கவேண்டுமென்றும்பல வருடங்களாகஐயா நெடுமாறன், வைகோ, தமிழருவி மணியன்,சீமான் , தா. பாண்டியன் போன்றோர் குரல்எழுப்பிவருகிறார்கள் தானே…!

ஜெயலலிதா இப்போது குரல் எழுப்புவதால்என்ன வித்தியாசம் வரப்போகிறது என்று பலர்நினைக்கலாம்.

இப்படி நினைப்போர் முக்கியமானஒன்றை புரிந்துகொள்ளவேண்டும்.இவ்வளவு காலமும் குரலெழுப்பியவர்கள் தமிழினப்பற்றும் மனிதாபிமானமும் நிரம்பிய தனி நபர்கள்அல்லது கட்சிகள்.

அவர்கள்தமிழகத்துக்கு வெளியே பலமில்லாதவர்கள்.

ஆனால் இம்முறை தீர்மானம்நிறைவேற்றியிருப்பது ஒரு அரசும் 8கோடி மக்களுக்கு மேற்பட்டவர்களைப்பிரதிநிதித்துவப்படுத்தும் சட்டசபையும், அதன்முதல்வரும்.

இது 8கோடி பேரின்தீர்மானத்துக்கு ஒப்பானது.சர்வதேச அரசமட்டத்தில் இதன் தாக்கம் அதிகமாக இருக்கும்.

இந்தத்தீர்மானத்தை சாட்சியாக, காரணமாககாட்டியே உலக நீதிமன்றங்களின்கதவுகளைஇனி உலகத்தமிழன் தட்டுவான்.

அடுத்ததாக ஈழத்தமிழருக்கு ஏற்படப்போகும் தன்னம்பிக்கை.

தமிழீழ விடுதலைப்புலிகளையும்,தலைவரையும் அழித்தபின்சிங்கள அரசு,தான் எதைச்செய்தாலும்கேட்க யாருமில்லை என்று கொக்கரித்துக்கொண்டிருந்தது.ஈழத்தமிழரின்பிரச்சினையை தீர்ப்பதற்காக இலங்கை-இந்தியஅரசுகளால்1987ல் போடப்பட்ட இலங்கை-இந்தியஒப்பந்தத்தில்உள்ளடக்கப்பட்ட 13ம் திருத்தச்சட்டத்தை கூடஇல்லாமலாக்கி பெயரளவுக்குக்கூட ஒரு தீர்வை கொடுக்கமறுத்த சிங்களஅரசுக்குதாம் செய்யும் எல்லாவற்றையும்பார்த்துக்கொண்டுதமிழக அரசு இனியும்சும்மா இருக்கப்போவதில்லை என்றசெய்தியைஇத்தீர்மானம் கட்டாயமாகக்கொடுக்கும்.அத்துடன் தமிழ்நாட்டு அரசால்கொடுக்கப்படும்அழுத்தம்காரணமாகஇலங்கை அரசுக்கு எதிரான வகையில்விரும்பியோ விரும்பாமலோ செயற்படவேண்டியகட்டாயத்துக்குள்இந்திய மத்தியஅரசு சிக்கியுள்ளதால்மேலும் பல பாதகமானவிளைவுகளுக்கும் அழுத்தங்களுக்கும் தாம்முகங்கொடுக்கவேண்டி ஏற்படும் என்பது அதற்குத்தெரியும்.

இது ஈழத்தமிழருக்கானஒரு தீர்வுத்திட்டத்துக்கு வழி அமைக்கலாம்.

1983ல் இலங்கையில் ஈழத்தமிழருக்கு எதிரானஇனக்கலவரம் அப்போதைய ஜனாதிபதி ஜே.ஆர்.என்பவராலும்சிறில் மத்தியூ, காமினி பொன்சேகா,அத்துலத் முதலி போன்ற இலங்கை அரசின்அமைச்சர்களாலும் ஏற்படுத்தப்பட்டது.

இதிலுள்ள மிகப்பெரும் கொடுமை என்னவென்றால்கொழும்பில்சிங்கள மக்கள் மத்தியில் கலந்துவாழ்ந்த தமிழ்க்குடும்பங்களின் விலாசங்களையும்,பெயர்களையும், வீட்டு இலக்கங்களையும்இனம்காணுவதற்கு ஏதுவாகசிங்களக்காடையர்களிடம் தேர்தல் இடாப்பு கொடுக்கப்பட்டிருந்தது.

அந்தப்புத்தகத்தில் கொடுக்கப்பட்டிருந்த விலாசங்களின்உதவியுடனேயே தமிழர்களின் வீடுகள் அடையாளம்கண்டுபிடிக்கப்பட்டு கொளுத்தப்பட்டார்கள்.

இந்த வாக்காளர் பட்டியலை காடையர்களுக்குகொடுத்து உதவியது இலங்கை அமைச்சர்களே எனபிற்காலத்தில் ஆட்சிக்கு வந்தபிரேமதாச என்பவர்கூறியிருந்தார்.

அப்படி திட்டமிட்டு ஏற்படுத்தப்பட்ட இனக்கலவரத்தில்ஆயிரக்கணக்கானதமிழர்களும், அவர்களின் கோடிக்கணக்கானசொத்தும் அழிக்கப்பட்டபோது துடித்துப்போய்கண்ணீர்விட்டு தமிழகத்தில் பந்த் ஏற்படுத்தியவர்அந்த நேரத்தைய முதல்வர் எம்.ஜி.ஆர்.

இன்று அதே கட்சியில் வந்த முதல்வர்ஜெயலலிதாவும், அரசும் ஈழத்தமிழர்மேல் காட்டும்அக்கறைக்கும், அவர்களிற்கு நியாயம்கிடைக்கவேண்டுமென்பதற்காக குரல்கொடுப்பதற்கும்உலகிலுள்ள ஒட்டுமொத்தத்தமிழினமும்தலைசாய்த்துநன்றிதெரிவிக்கின்றது.

அமெரிக்கா மற்றும் மேற்குலக நாடுகள்இலங்கையில் நடந்த இனப்படுகொலைபற்றிஐ.நா.வில் குரல் எழுப்பினாலும்அவர்களை எப்படி ஏமாற்றுவது என்பதுஇலங்கைக்கு கைவந்தகலை.

ஆனால் இந்திய மாணவர்களின்போராட்டத்தையும்,தமிழக சட்டசபைதீர்மானத்தையும்அவர்களால் தட்டிக்கழிக்கமுடியாது.

இந்த போராட்டமும் தீர்மானமும் மத்திய’சோனியா’ அரசுக்குபுதிய நெருக்கடியைக்கொடுக்கப்போவது நிச்சயம்.

இம்முறையாவது தமிழகத்தின் இந்த எழுச்சிதமிழர்பிரச்சினைக்கு நல்லதொரு முடிவை ஏற்படுத்திவிட்டுத்தான்அடங்கவேண்டும் என்பதுதான்உலகத்தமிழன்ஒவ்வொருவனிதும் எதிர்பார்ப்பாகும்.

ad

ad