இதுதான் விபச்சாரம் நடந்த யாழ் வீடு
வன்னியினில் யுத்த பாதிப்புகளிற்குள்ளான சில பெண்களை வைத்து இவ்விடுதி இயக்கப்பட்டமையும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.பெரும்பாலும் தெற்கிலிருந்து யாழ் செல்லும் விருந்தினர்களை மகிழ்விக்க இவ்விடுதி பயன்பட்டதும் விசாரணைகளினில் கண்டறியப்பட்டுள்ளது.அப்பாவி யுவதிகளை வேலை வாய்ப்பிற்கான ஆசை வார்த்தை காட்டி அழைத்து சென்று இவ்வாறு தொழிலில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன.
குறிப்பாக வன்னியின் வலைஞர் மடம் பகுதியனை சேர்ந்த இளம் தாயொருவர் தனது குடுமப வறுமை காரணமாகவே இத்தொழிலில் ஈடுபட்டதாகதாக அங்கு பிரசன்னமாகியிருந்த பத்திரிகையாளர்களிடம் கெஞ்சி கேட்டுக்கொண்டார்.கணவர் இறுதி யுத்தத்தின் போது காணாமல் போய்விட்டதாகவும் சிறு வயதுடைய மூத்த மகன் ஆச்சிரமமொன்றினில் தங்கியிருப்பதாகவும் மற்றைய சிறுமகனுக்காக அத்தொழிலுக்கு வந்ததாகவும் அவர் கண்ணீருடன் தெரிவித்தார். கைதானவரில் மாணவி ஒருவரும் மாணவனும் அடங்குகின்றனர் என அறியப்பட்டுள்ளது.
ஏற்கனவே யாழ்நகரப்பகுதியினில் இதே பாணியிலான விடுதியொன்று அண்மையில் கண்டுபிடிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.