புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

30 மார்., 2013


கிளிநொச்சி கந்தசுவாமி கோவிலடியில் உள்ள தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் காரியாலயத்தின் மீதுஇனந்தெரியாத சிலர் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

இன்று மதியம் 12மணியளவில்இத்தாக்குதல்சம்பவம்இடம்பெற்றுள்ளது.
நாடாளுமன்றஉறுப்பினர்சிறிதரன்,சுமந்திரன்மாவைசேனாதிராஜாமற்றும் சரவணபவன் ஆகியோர் இன்று பொது மக்கள்சந்திப்பு ஒன்றில் கலந்துக் கொண்டிருந்த வேளையில் இந்ததாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
இத்தாக்குதல் சம்பவத்தில் 15 பொது மக்கள்காயமடைந்திருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
இலங்கையின் தேசிய கொடிகளுடன்முகங்களை மூடிக்கொண்டு வந்த சிலரே இந்த தாக்குதலை நடத்திஇருப்பதாகவும்பாராளுமன்ற உறுப்பினர் சிறீதரனைக்கொச்சைப் படுத்தும் வார்த்தைகளைப் பிரயோகித்துக்கொண்டே அங்கிருந்தவர்கள் மீது தாக்குதல்நடத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளைதாக்குதல் சம்பவம் இடம்பெற்று அரைமணித்தியாலத்திற்குப் பின்னரே அவ்விடத்திற்குபொலிஸார் வந்துள்ளனர்.
தாக்குதல் நடத்திய இரண்டு பேரை பொது மக்கள் பிடித்துகாவற்துறையினரிடனம் ஒப்படைத்த போதும்அவர்களைபின்னர் காவற்துறையினர் விடுவித்ததாக நாடாளுமன்றஉறுப்பினர் சுரேஷ் பிரேமசந்திரன் தெரிவித்துள்ளார்.
தெல்லிப்பளை மற்றும் அளவெட்டி பிரதேசங்களில் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பினர் நடத்திய ஆர்ப்பாட்டத்தில்தாக்குதல் நடத்தியவர்களை பொதுமக்கள் மடக்கி பிடித்துபொலிஸாரிடம் ஒப்படைத்து அவர்களை விடுதலைசெய்தமையும் இங்கு சுட்டிக்காட்டத்தக்கது.
இங்கு தாக்குதல் நடத்தியவர்கள் இராணுவப்புலனாய்வாளர்களே என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின்பாராளுமன்ற உறுப்பினர்கள் தெரிவிக்கின்றனர்.

ad

ad