புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

30 மார்., 2013

புலிகள் கனவில்கூட தமீழத்தையும் தமிழகத்தையும் சேர்த்து அகண்ட தமிழகம் உருவாக்க நினைக்கவில்லை. ஆனால் இந்திய கொள்கை வகுப்பாளர்களின் ஒரு "மறைமுக" குற்றச்சாட்டாக அது இருந்தது. அதிலிருந்தே தமிழர்களுக்கு ( ஈழத்தமிழர்களுக்கு மட்டுமல்ல தமிழக தமிழர்களுக்கும் சேர்த்து..) எதிரான இந்திய வெளியுறவுத்துறை கொள்கை வகுப்பாக்கமும் வரையப்பட்டது. ஈவு இரக்கமின்றி ஒரு மனிதப்பேரழிவை நிகழ்த்துமளவிற்கு அது நடைமுற்ப்படுத்தப்பட்டது வரலாறு. 

ஆளால் நீண்ட காலப்போக்கில் இரு தமிழ் நிலப்பரப்புக்களும் இணைவதற்கான ஒரு கூட்டு உளவியலை இந்த அபத்தமான கொள்கை வகுப்பாக்கமே உருவாக்கிவிட்டிருக்கிறது. தமது கோரிக்கைகளை செவிமடுக்காது தமிழ் இன அழிப்பை தடுத்து நிறுத்தாதது மட்டுமல்ல அதை முன்னின்று நடத்திய இந்தியாவிலிருந்து தமிழகம் உளவியல்ரீதியாக தனியாக கழன்றுவிட்டது. 

தற்போது நடக்கும் கூடங்குளம் போன்ற பிரச்சினைகளும் அந்த பிரிவிற்கான நியாயத்தை வலியுறுத்திக்கொண்டிருக்கின்றன. 

போதாததற்கு "புலிகளின் கடல் அரண்" உடைந்து போனதால் இந்து சமுத்திரப் பிராந்தியத்தினூடாக சீனா, பாகிஸ்தான் தென்புறத்தினூடாக இந்தியாவை வளைக்க முற்படுகின்றன. இதற்கு சிங்களம் உடந்தையாக இருப்பது குழந்தைகளுக்கும் தெரியும்.

சர்வதேச உறவுகள் என்ற நவீன இராஜதந்திரப்பதம் சொல்லும் எளிய பாடம்.." எங்கோ தேள் கொட்ட எங்கேயோ நெறி கட்டியதாம்"..

இப்போது கூட்டிக்கழித்து பாருங்கள்.. இந்திய கொள்கை வகுப்பாக்கத்தின் அலங்கோல நிர்வாணம் தெரியும். தமிழீழம் என்ற ஒரு தேசத்தை உருவாக்க விடாது தடுத்த இந்திய கொள்கை வகுப்பாக்கம் தற்போது தமிழகத்தையும் சேர்த்து பறிகொடுப்பதற்கான ஏது நிலையை உருவாக்கிவிட்டிருக்கிறது.

மாணவர்கள் போராட்டத்தின் வீச்சையும் தமிழக தீர்மானத்தையும் இந்திய கொள்கைவகப்பாளர்கள் புறகக்ணித்தால் விளைவு விபரீதமாக இருக்கும்.

இப்போதும் ஒன்றும் கெட்டுவிடவில்லை.. எந்த பாவத்திற்கும் பிராயசித்தம் இருக்கு.. இந்தியா தமிழக தமிழர்களின் மனங்களை வென்றெடுக்கவும், பிராந்திய அச்சுறுத்தலில் இருந்து விடுபடவும் தமிழீழத்தை அங்கீகரிக்க வேண்டும். முடிவு இந்திய கொள்கை வகுப்பாளர்களின் கையில்.parani kirushnarajani 

ad

ad