புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

20 மே, 2013


நந்திக்கடலில் சடலமாக மீட்கப்பட்ட பிரபாகரன் எரித்திரியாவிலா? பேய்க் கதை என்கிறார் இராணுவப் பேச்சாளர்
தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் சடலத்தை 2009 ம் ஆண்டு மே மாதம் 18ம் திகதி நந்திக்கடலில் இருந்து மீட்டோம். எப்படி அவர் எரித்திரியாவில் இருப்பது? என்ன பேய்க் கதை இது என இராணுவப் பேச்சாளர் ருவான் வணிகசூரிய தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் இராணுவப் பேச்சாளர் மேலும் தெரிவிக்கையில்,
பயங்கரவாதம் தோற்கடிக்கப்பட்டாலும் நாட்டில் இனங்களுக்கு இடையில் பிரிவினைவாதத்தை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுக் கொண்டு வருகின்றது.
அந்த பிரிவினைவாதத்திற்கு ஆதரவு நல்குவோர் இவ்வாறான பேய் கதைகளை பரப்பிவிடக்கூடும். இதேவேளை, விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனின் தாய் மற்றும் தந்தை இலங்கை இராணுவத்திடம் சிறிது காலம் இருந்துள்ளனர்.

இந்த நிலையில் நந்திக்கடல் களப்பில் கண்டெடுக்கப்பட்ட சடலம் பிரபாகரனுடையது என்பதை அவரது சகாக்களே அடையாளம் காட்டினர்.
எனவே பலியானது விடுதலைப் புலிகளின் தலைவர் என்பது நூற்றுக்கு நூறு வீதம் உண்மை.
வெளிநாட்டில் இருக்கின்ற புலி பயங்கரவாதிகளின் ஆதரவாளர்கள், அவர்களுக்கு உதவி புரியும் அரச சார்பற்ற நிறுவனங்கள் பிரிவினைவாதத்திற்கு நிதி சேகரிப்பதற்காக இவ்வாறான பேய்க் கதையை பரப்பி விட்டிருக்கலாம் என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

ad

ad