புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

20 மே, 2013

றொபேட் ஓ பிளேக்கின் பதவியைக் கைப்பற்றுகிறார் இந்திய வம்சாவளி பெண் இராஜதந்திரி

தெற்கு மத்திய ஆசியப் பிராந்திய விவகாரங்களுக்கான அமெரிக்க உதவி இராஜாங்கச் செயலராகப் பணியாற்றும் றொபேட் ஓ பிளேக்கின் இடத்துக்கு, இந்திய வம்சாவளிப் பெண் இராஜதந்திரியின் பெயரை ஒபாமா நிர்வாகம் முன்மொழிந்துள்ளது.

நிஷா தேசாய் பிஸ்வால் என்ற பெண் இராஜதந்திரியே இந்தப் பதவிக்கு நியமிக்கப்படவுள்ளார். 

இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவராக இருந்தாலும் இவர் இந்தியாவைப் பிறப்பிடமாக கொண்டவர் அல்ல.

இவர் 2010ம் ஆண்டு தொடக்கம் யுஎஸ்எய்ட் உதவி நிர்வாகியாகப் பணியாற்றி வருகிறார்.

அதேவேளை, றோபேட் ஓ பிளேக் இந்தோனேசியாவுக்கான அமெரிக்கத் தூதுவராக நியமிக்கப்படவுள்ளார். 

ad

ad