புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

20 மே, 2013


உலகவாழ் தமிழ் மக்களுக்கு ஒர் அறிவித்தல. சுவிஸ் நாட்டில் சொலுத்தூண் மாநகரில் ஓர் கிராமத்தில
உள்ள அம்மன் ஆலயத்தில் ஆலயத்தை உருவாக்கிய குருக்கள் முதல்கொண்டு பல குடும்பங்களை ஆலயத்திற்கு வர த்தடை செய்துள்ளனர் ஆறுபேர் கொண்ட நிர்வாகத்தினர் இப்போது
ஆலயத்தில் பல விழாக்களை செய்ய
ஆரம்பித்துள்ளனர் இங்கு பல மக்கள்
ஏன் ஆலயகுருக்களையும் பல பொது
மக்களையும் வரதடைசெய்துள்ளீர்கள்
ஏன் என்று கேட்டபோது எல்லோரும்
வரலாம் தடை எடுத்துவிட்டோம் பல
கடிதங்கள் அவர்களை வரும்படி அனுப்பியுள்ளோம் அவர்கள் வரவில்லை
என பதில் சொல்லுகின்றனர் என்ன
கொடுமை சரவணா
இந்த நிர்வாகத்தினர் சொல்கின்ற பொய் அளவிடுட முடியாது இவர்கள்
சொல்லுகின்ற பொய்யை எவருமே
நம்பவேண்டாம் தயதுசெய்து
  • 2 Personen gefällt das.
  • Veluppillai Suppiah Enathu Uoormakkal Perunth Thokai Panaththai Koduththum Eppadi Nelaimaiyaa? Ellaam Ambal Seiyal !!!
  • Vinayagamoorthy Sabaratnam நாங்கள் எல்லோரும் தமிழர்கள் .தமிழால், இன உணர்வால் ஒன்று பட்டு இருக்கின்றோம் என்று பேச்சளவில்தான் சொல்லுகிறோமே தவிர செயலளவில் இல்லை .ஒரு காக்கையின் ஒற்றுமை கூட எங்களில் இல்லை .அப்படியிருந்த்திருந்தால் இப்படியொரு நிலை இருந்திருக்காது .எல்லா சரி பிழையையும் இறைவனே பாத்துக்கொள்வார் என்றால் ,நீதிமன்றம் ,பொலிஸ் ,வக்கீல் வாதங்கள் ,ஏன் uno கூட எதற்காக ???????? தவறு செய்தவர்கள் தானாகத் திருந்தவேண்டும் , இல்லையேல் திருத்தவேண்டும்.அதைத்தான் நாங்கள் செய்கிறோம் .
  • Vinayagamoorthy Sabaratnam நன்கொடையாக 21000.00Sfr , 150000.00 கடனாக , பல லட்சம் Sfr குகள் மக்களின் பங்களிப்பாக சேர்த்துக்கொடுத்தும் ,அதைவிட இந்தக்கோவிலைக் கட்டுவதற்கு பல வழிகளில் உதவி செய்த எங்களுக்கு கொடுக்கப்பட்ட சன்மானம் !!!!!!!!!!!!!!!!!!(கடனாக எடுத்துக்கொடுத்த வங்கிக்கடனை கட்டும் படி சொன்னதற்கும் , பங்களித்த மக்களுக்காக ஒரு கூட்டம் வைக்கும்படி கேட்டதற்கும் கிடைத்த தண்டனை .)
    Pungudutivu Sahana சுவிசில் பல ஆலயங்களை எவ்வளவோ கஷ்டபட்டு நிதி பிரச்சினைகளை சமாளித்து நடதுவதேன்பதே பெரிய சிரமமான விஷயம் இருந்தும் மேலே உள்ளவர்களை போன்ற வர்கள் இன்னமும் நடத்தி கொண்டு தன இருக்கிறார்கள் தூய்மையாக எல்லாவற்றையும் பொதுவில் வைத்து விட்டு திறந்த நோக்கோடு .இருந்தும் 1-2 கோயில்களில் பெருமளவு நிதியை மக்களிடம் நல்ல பசப்பு வார்த்தைகளை சொல்லி திரட்டி விட்டு தங்கள் கைகளில் வைத்து கொண்டு உருவாக்க காரணமாக இருந்த வர்களை நீக்கியோ ஒதுக்கியோ விட்டு தாங்களே கைப்பற்றி உள்ளார்கள் முக்கியமாக சுவிசில் 4 ஆலயங்கள் இப்படியான நிலையை எடுத்துள்ளன நிதியை தனிப்படவர்கள் கைவசப் படுத்தி வதுள்ளமை அல்லது உருவாக்கியவர்களை வெளியேற்றி தம் வசம் எடுத்துள்ளமை மக்களே இவற்றை கண்டு இந்த ஆலயங்களை பகிச்கரிக்கணும் அப்போது வருமானம் இல்லாமல் இந்த கயவர்கள் அழிந்தே போவார்கள் கோயில் என்றால் எல்லாமே பொதுவில் வைக்கணும் . நீங்கள் சொலும் ஆலயத்தை எவ்வளவோ கஷ்டப்பட்டு அந்த ஆலய குருவானவர் உருவாக்கி வளர்தேடுற்ற்ஹார் அவரோடு குறிப்பிட்ட சில பக்தர்கள் தன உண்மையாகவே பாடு அப்ட்டு உருவாக்கியவர்கள் இப்போ யாரோ சிலரின் கையில் போயுள்ளது தந்திர மாயத்தால் மக்களே பகிச்கரியுங்கள் எண்கள் சமய குறு ஒருவரின் வயிற்றில் அடித்தவன் நல்ல இருக்க மட்டன் சமயகுரு என்பவன் கடவுளு க்கு சமன் அதற்க்க தன திவசம் போன்ற காரியங்களில் திருப்தி பட பொருட்களை கொடுப்பார்கள் அவர்கள் வயிற்றி அடிப்பவர்கள் உருப்படவே மாட்டார்கள்
    • Guna Suntharesan Makkalukuunmainilaitheriyathu
    • Vinayagamoorthy Sabaratnam இக் கோவில் ,1991 ம் ஆண்டு புங்குடுதீவைச் சேர்ந்த சுந்தரேச சர்மா ஐயாவால் ஆரம்பிக்கப் பட்டது .ஏறக்குறைய 18 ஆண்டுகளாக அதன் வளர்ச்சிக்காக மிகவும் பாடு பட்டு ஒரு புதிய ஆலையத்தை அமைக்க வேண்டும் என்று ஆசைப்பட்டு அதற்காக தினமும் உழைத்தார். ஆனால் இன்று அவரையும் அவர்கள் குடும்பத்தவர்களையும் கோவிலுக்கு வரத்தடை செய்துள்ளது இன்றைய நிர்வாகம் .இதைப்பற்றிக் கேட்கும் மக்களுக்கு அவர்கள் சொல்கின்ற அலங்காரமான பொய்கள் .........அப்பப்பா இப்படியும் மனிதர்கள் இருகின்றார்களா
      என்று எண்ணத் தோன்றும் .
      இதைவிடக் கொடுமை என்னவென்றால் இவற்றையெல்லாம் தெரிந்தும் ,பெரிய குருக்கள் மார்களின் வருகையும் , அதற்காக அவர்கள் கூறும் காரணங்களும் தான் வேதனையான விடயம் .(தாங்கள் தங்களின் தர்மமான குருத்தொழிலை செய்வதாகச் சொல்கின்றார்கள் .) இப்படியான செயன்முறை வேறு எந்த மதத்திலும் இல்லை . தன் சார்ந்த இனத்தின் வேதனையை சிறிதேனும் பொருட்படுத்தாது வெறும் பணம் பண்ணும் நோக்கமாகவே இதனைப் பார்ப்பவர்களுக்கு எண்ணத்தோன்றுகின்றது.
      எழுதிவைத்த கணக்குகளில் கூட எத்தனையோ பிழைகள் கண்டுபிடிக்கின்ற இக்காலகட்டத்தில் ,எழுத்துகளே இல்லாமல் தனியொருவரின் கைகளின் கோவில் நிதிகள் .
      இது எந்த வகையில் நீதியாக இருக்கும் ? பொதுமக்களின் நிதியில் தனிப்பட்ட ஒருவரின் பெயரில் ஆலயம் .நீதி கேட்டால் கோவிலுக்கு வரத்தடை . "ஏமாறுகிறவர்கள் இருக்கும் வரை ,எமாற்று கின்றவர்கள் இருந்துகொண்டேதான் இருப்பான் ."

ad

ad