புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்

18 ஜூன், 2013

மாநிலங்களவை தேர்தல்: வாக்களிக்க அனுமதிகோரி 6 தேமுதிக எம்எல்ஏக்கள் மனு: பதில் அளிக்க கோர்ட் உத்தரவு
தமிழக சட்டப்பேரவையில் இருந்து தேமுதிகவைச் சேர்ந்த 6 உறுப்பினர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். இதனை எதிர்த்து தேமுதிக
எம்எல்ஏக்கள் 6 பேர் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். இந்த  வழக்கை விசாரித்த தனிநீதிபதி ராúஷ்வரன் வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

தனி நீதிபதியின் உத்தரவை எதிர்த்து தேமுதிக எம்எல்ஏக்கள் உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம் வரும் ஜூலை 3ஆம் தேதிக்குள் பதிலளிக்க தமிழக சட்டப்பேரவை செயலாளருக்கு உத்தரவிட்டது. 
மாநிலங்களவை தேர்தல் வரும் 27ஆம் தேதி நடைபெறுவதால் அவசர வழக்காக விசாரிக்க மனுவில் கோரிக்வை வைத்தனர் தேமுதிக எம்எல்ஏக்கள். இதையடுத்து வரும் 24ஆம் தேதிக்குள் பதில் அளிக்க சட்டப்பேரவை செயாலாளருக்கு உ