புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்

18 ஜூன், 2013


கணவனை கண்டித்து தீக்குளித்த மனைவி சாவு; மனைவி இறந்த சோகத்தில் கணவனும் தற்கொலை
சேலத்தில் உள்ள குகை, எஸ்.எம்.சி. காலனியைச் சேர்ந்தவர் கணபதி (33), ஷேர் ஆட்டோ ஓட்டுநரான இவரது மனைவி பெயர் லதா (31). இவர்களுக்கு கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது.
இவர்களுக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். கணபதிக்கு குடிப்பழக்கம் உள்ளது. இந்த நிலையில் தம்பதியர் இடையே அடிக்கடி தகராறு ஏற்படுவது வழக்கம் என்று கூறப்படுகிறது.

கடந்த சில நாள்களுக்கு முன்பு பெங்களூருவில் உள்ள சித்தியின் வீட்டுக்கு குடும்பத்துடன் செல்லவேண்டும் என்று லதா கூறியுள்ளார். ஆனால் கணபதி அதற்கு எதிர்ப்புத் தெரிவித்தாராம். இதனால் அவர்களிடையே மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது.
நீ பெங்களூர் வரவில்லை என்றால் நான் தீ வைத்துக்கொண்டு இங்கேயே செத்துவிடுவேன் என்று லதா தன்னுடைய உடலில் மண்ணெண்ணையை ஊற்றிக்கொண்டு கணவரிடம் சண்டை போட்டுள்ளார். இந்த நிலையில், விளையாட்டக லதா உரசிய தீக்குச்சியின் நெருப்பு மண்ணெண்ணையில் நனைந்திருந்த லதாவின் உடலில் தீபிடித்து எரிந்துள்ளது.
கடந்த 14-ம் தேதி (வெள்ளிக்கிழமை) இரவு இருவருக்குமிடையே நடந்த தகராறில் தீப்பிடித்து எரிந்த நிலையில், மனைவி லதாவும், அவரை காப்பற்ற நடந்த போராட்டத்தில் கணவர் கணபதியின் உடலெங்கும் இலேசான தீக்காயங்களுடனும் சேலம் அரசு மருத்துவமனையில் இருவரும் சிகிச்சைக்காக சேர்ந்துள்ளனர்.
என்பது விழுக்காடு உடலில் தீக்காயம் அடைந்திருந்த லதா, திங்கள்கிழமை காலையில் சிகிச்சை பலனளிக்காமல் பரிதாபமாக உயிரிழந்தார். இதனால் மருத்துவமனைக்கு விரைந்து வந்த லதாவின் உறவினர்கள் தண்ணியடித்துக் கொண்டு பொறுப்பில்லாமல் திரியும் உன்னால்தான் எங்கள் பிள்ளை தீக்குளித்து விட்டால் என்று கணபதியை திட்டியதாக கூறப்படுகிறது.
அப்போது சிறிது நேரத்தில் அரசு மருத்துவமணை படுக்கையில் இருந்து எழுந்து கணபதி மாயமானார் கணபதி. மாலையில் அரசு மருத்துவமனையின் பழைய நுழைவு வாயில் அருகேயுள்ள பழைய நோட்டுப் புத்தகங்கள் போட்டு வைத்திருக்கும் ஒரு கிடங்கில், தூக்கிட்ட நிலையில் கணபதி இறந்திருப்பது தெரிய வந்தது. மருத்துவமனையின் மொட்டை மாடியின் மேல் கிடந்த கேபிள் டி.வி இணைப்பிற்கு பயன்படுத்தும் வயரில் அவர் தூக்கிட்டு தற்கொலை செய்திருந்தார். 
இது குறித்து உடனடியாக செவ்வாய்ப்பேட்டை காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் விரைந்து வந்து கணபதியின் சடலத்தை கைப்பற்றி உடற்க்கூறு ஆய்விற்கு அனுப்பிவைத்தனர். இது குறித்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனர். மனைவி இறந்த சில மணி நேரங்களில் கனவனும் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பாக பேசப்பட்டது.