புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

18 ஜூன், 2013

லண்டன் ஓவல் மைதானத்தின் வெளியே தமிழர்கள் 




இலங்கை அரசாங்கம் நடத்திய இனப்படுகொலையை எதிர்த்து போராடும் தமிழர்களின் ஒரு ஜனநாயக வழிமுறையான இலங்கையை புறக்கணிப்போம் என்ற போராட்டத்தின் ஒரு கட்டமாக இலங்கை துடுப்பாட்டத்தை புறக்கணிக்கும் முகமாக லண்டன் ஓவல் மைதானத்தின் வெளியே துண்டுபிரசுரத்தை விநோயோகித்த தமிழர்கள் மீது சிங்கள காடை  கும்பல் கண்முடித்தனமாக தடிகள் மற்றும்  கல்லுகள் கொண்டு தாக்குதல் நடத்தியுள்ளனர். ஒரு மிகப்பெரும் ஜனநாயக இங்கிலாந்து நாட்டில் ஜனநாயக வழியில் போராடிய தமிழர்களை தாக்கிய ஸ்ரீலங்கா சிங்கள இனத்தவர்கள் இலங்கையில் அவர்கள் மீது எப்படி நடந்து கொள்வார்கள் என்பதை சிந்திக்கவேண்டும்.விளையாட்டை அரசியல் ஆக்கவேண்டாம் என்று கூறும் சில உயர்ந்தவர்கள் விளங்கி கொள்ளவேண்டும் தமிழர்கள் ஸ்ரீலங்கா அரச பயங்கரவாதம் தான் விளையாட்டை அரசியல் ஆக்கியது.
விளையாட்டு வீரரகள் இலங்கை அரசின் பாராளுமன்ற கதிரைகளை தமதாக்கி கொண்ட வரலாறு உணர்த்தும்.தமிழர்கள் போராட்டம் ஜனநாயக வழி அவர்களோ வன்முறை பிரோயோகம் லண்டனிலும் தமிழன் அடிவேண்டுகிறான்,காரணம் போராடும் தமிழர்கள் போராட்டங்களில் ஒற்றுமையாக கலந்துகொள்ளவேண்டும் அதிகமாக தமிழர்கள் இருந்தால் சிங்கள காடையர்கள் தாக்க வரமாட்டார்கள். இதில் ஒரு வேடிக்கை ஸ்ரீலங்கா துடுப்பாட்ட அணியை குறுகிய மனம் படைத்த ஒரு சில தமிழர்களும்? ஆதரிக்கிறார்கள்.

















Share this article :

ad

ad