புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்

18 ஜூன், 2013

ovel-clash2இலங்கையில் நடைபெறவுள்ள கொமன்வெல்த் உச்சிமாநாட்டைப் புறக்கணிக்கக் கோரி, லண்டன் ஓவல் துடுப்பாட்ட மைதானம் அருகே போராட்டம் நடத்திய ஈழத்தமிழர்களை, இலங்கை அரச ஆதரவுக் காடையர்கள் தாக்கியுள்ளனர்.

லண்டன் ஓவல் மைதானத்தில், இலங்கை – அவுஸ்ரேலிய அணிகளுக்கு இடையில் ஐசிசி கோப்பைக்கான துடுப்பாட்டப் போட்டியின் காலிறுதி ஆட்டம் நேற்று நடைபெற்றது.
இதன்போதே இலங்கையைப் புறக்கணிக்க வலியுறுத்தி ஈழத்தமிழர்கள் போராட்டம் ஒன்றை நடத்தினர்.
அதேவேளை, இலங்கை அரசாங்கத்தின் ஏற்பாட்டின் பேரில், சிங்கக்கொடியேந்திய ஆர்ப்பாட்டக்காரர்களும், அப்பகுதியில் போராட்டம் நடத்தினர்.
திடீரென சிங்கக் கொடியேந்திய இலங்கை அரசு ஆதரவுக் காடையர்கள், ஈழத்தமிழர்கள் மீது பாய்ந்து தாக்குதல் நடத்தினர். இதன்போது பெண்கள், சிறுவர்களும் தாக்கப்பட்டனர்.
பிரித்தானியக் காவல்துறையினர் இலங்கை அரச ஆதரவாளர்களை தடுக்க முயன்றபோது அவர்களுடனும் மோதினர்.
இதையடுத்து வன்முறையில் இறங்கிய சிங்கக்கொடியேந்தி ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது பிரித்தானியக் காவல்துறையினர் தடியடி நடத்தி கலைத்தனர்.
ovel-clash1 (1)
ovel-clash1
ovel-clash3
ovel-clash4
ovel-clash5
ovel-clash7