பதவி விலகினார் மார்க்கரெட் பெஸ்ட் ; பிரகாசமாகிறது கென் கிருபா வெற்றி வாய்ப்பு
ஸ்காபுறோ கில்ட்வூட் தொகுதியிலிருந்து ஒன்ரோறியோ சட்டசபைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட மார்க்கரெட் பெஸ்ட் பதவி விலகுவதாக அறிவித்துள்ளார். லிபரல் கட்சியினைச் சேர்ந்த யாராவது ஒருவர் தினமும் பதவி விலகல் கடிதத்தினை மேலிடத்திற்கு அனுப்பி வைப்பதென்பது சமீப காலமாகவே வழக்கமாகி வருகிறது.
தற்போது ஐந்து தொகுதிகளிலும் இடைத்தேர்தல்கள் நடத்தினாலும் கூட இன்னமும் பல லிபரல் கட்சியினர் இதே பாணியில் தொடர்ந்து பதவி விலக முன் வந்தால் தற்போது இக்கட்டான நிலைக்குத் தள்ளப்பட்டுள்ள லிபரல் கட்சி மேலும் பல தர்ம சங்கடங்களை சந்திக்க நேரிடும் . எனவே ஒட்டுமொத்தமாக ஒன்றோறியோ முழுவதற்கும் மறு தேர்தல் நடத்துவது சிறந்தது என அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்
இது ஒருபுறமிருக்க ஸ்காபுறோ கில்ட்வூட் தொகுதி மார்க்கரெட் பெஸ்ட்டின் விலகல் அத்தொகுதியில் கோன்செர்வேற்றிவ் வேட்பாளராக தெரிவு செய்யப்பட்டிருக்கும் நம்மவர் கென் கிருபாவின் வெற்றி வாய்ப்பினை பிரகாசிக்கச் செய்துள்ளது.
லிபரல் கட்சியிலிருந்து பதவி விலகியுள்ள ஸ்காபுறோ கில்ட்வூட் உறுப்பினர் மார்க்கரெட் பெஸ்ட் கருப்பினத்தைச் சேர்ந்தவர் என்பதோடு , இதே தொகுதியிலிருந்து இரு முறை ஒன்ரோறியோ சட்டசபைக்குத் தெரிவானவர் என்பதும் மெக்கென்றி தலைமையிலான அரசில் அமைச்சர் பதவி வகித்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.