Kalaignar Karunanidhi · 32,888 like this
36 minutes ago · மாநிலங்களவைத் தேர்தலில் தி.மு.கழக வேட்பாளர் கனிமொழிக்கு காங்கிரஸ் கட்சியிடம் ஆதரவு கேட்டுப் பெற்றதையொட்டி, தி.மு.கழகம் இலங்கைப் பிரச்சினையையே மறந்து விட்டதாகவும், கைவிட்டு விட்டதாகவும் ஒருசிலர் பேச முற்பட்டிருக்கிறார்கள். தி.மு.கழகத்தின் மாநிலங்களவை வேட்பாளருக்கு முதலில் கம்யூனிஸ்ட் கட்சிகளிடமும், பின்னர் தே.மு.தி.க.விடமும், மனித நேய மக்கள் கட்சியிடமும், புதிய தமிழகம் கட்சியிடமும், அதன் பின்னர் காங்கிரஸ் கட்சியிடமும் ஆதரவு கேட்டதுதான் உண்மை. இதில் எந்தக் கட்சியிடமும் எந்தவிதமான நிபந்தனையும் இல்லாமல் இந்தத் தேர்தலை யொட்டி மட்டுமே பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. ஆனால் கடந்த சில மாதங்களுக்கு முன்பு காங்கிரஸ் கட்சியோடு உடன்பாட்டை முறித்துக் கொண்ட தி.மு.கழகம், தற்போது மீண்டும் காங்கிரஸ் கட்சியோடு உறவு கொண்டுவிட்டது, இலங்கைப் பிரச்சினையையே கைகழுவிவிட்டது என்றெல்லாம் ஆரம்பத்திலிருந்தே தி.மு.கழகத்தின் மீது பகையுணர்ச்சியோடு வெறுப்பு அரசியல் நடத்தி வரும் ஒருசிலர் பிரசாரம் செய்யத் தொடங்கிவிட்டார்கள்.
இலங்கைப் பிரச்சினை வேறு, மாநிலங்களவைத் தேர்தல் வேறு, கூட்டணி வேறு. ஆனால் அனைத்தையும் ஒன்றாகப் போட்டு குழப்பம் விளைவித்திட சிலர் முயற்சிக்கிறார்கள். தி.மு.கழகம் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசிலிருந்து விலகிய போது, மத்திய அரசிலே கழகத்தின் சார்பில் அமைச்சர்களாக இருந்தவர்கள் எல்லாம் விலகினார்கள். இப்போது மாநிலங்களவைத் தேர்தலில் தி.மு.கழக வேட்பாளருக்கு காங்கிரஸ் கட்சி ஆதரவு தெரிவித்த காரணத்தால், கழகத்தைச் சேர்ந்தவர்கள் மத்திய அரசிலே சேர்ந்து விடவில்லை. இதையெல்லாம் மறைத்து விட்டு, தி.மு.கழகத்தின் மீது ஏதாவது பலி சுமத்த வேண்டுன்மென்றே எண்ணம் உடையவர்கள்தான், கழகத்தின் மீது சேற்றை வாரித் தூற்றிட முயலுகிறார்கள்.
அனால் "இந்து" போன்றதொரு நாளேடே; மாநிலங்களவை கழக வேட்பாளருக்கு காங்கிரஸ் ஆதரவு கொடுத்தது பற்றி ஒரு தலையங்கமே எழுதியிருக்கிறது. "அடைந்தது ஒன்று; இழந்தது ஏராளம்" (For one more, a lot lost) என்ற தலைப்பில் அது எழுதப்பட்டுள்ளது. அதில் தி.மு.கழகமும், காங்கிரசும் ஏதோ சந்தர்ப்பவாதி கள் போலவும், அ.தி.மு.க.வின் தலைவி மிகவும் தந்திரமாக காயை நகர்த்தினார் என்பது போலவும் எழுதியிருப்பதன் மூலம் "இந்து" யார் என்பதையும், அவர்களின் உள்நோக்கம் என்ன என்பதையும் புரிந்து கொள்ள முடிகிறது.
அந்தத் தலையங்கத்தில் எழுதியிருப்பதைப் போல, ஜெயலலிதா கடந்த தேர்தலில் அவர்களோடு ஒன்றாக இருந்த தோழமைக் கட்சிகளையெல்லாம் தொடர்ந்து ஒவ்வொன் றாகக் சுலற்றிவிட்டது சந்தர்ப்பவாதமாக "இந்து"வுக்குத் தெரியவில்லையா? ஏன்; இறுதியாக அ.தி.மு.க ஆதரித்த இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்தியத் தலைவர்கள் எல்லாம் டெல்லியில் ஜெயலலிதாவைச் சந்தித்து ஆதரவு கேட்டபோதே, அவர்களை அங்கேயே மதித்து ஆதரிப்பதாகக் கூறாமல், சென்னைக்கு வந்த பிறகு, எங்கே தே.மு.தி.க.வும், தி.மு.க.வும், கம்யூனிஸ்ட் கட்சிகளும் ஒன்றாகச் சேர்ந்து இரண்டு இடங்களிலே வெற்றி பெற்று, அ.தி.மு.க. நிறுத்திய ஐந்து வேட்பாளர்களில் ஒருவர் தோற்க நேர்ந்து விடுமே என்பதைப் புரிந்து கொண்டு தனது வேட்பாளர்களில் ஒருவரைத் திரும்பப்
பெற்று, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியை ஆதரிப்பதாக அறிவித்தாரே, அதற்குப் பெயர் என்ன ? டெல்லியிலே இருந்த போது பிடிக்காமல் இருந்த எந்தத் கம்யூனிசக் கொள்கை, தமிழ்நாட்டிற்கு வந்ததும் அம்மையாருக்குப் பிடித்து விட்டது ?
ஜெயலலிதா செய்தால் அதற்குப் பெயர் ராஜதந்திரம்; அதையே தி.மு.க. செய்தால் 'இந்து'வுக்கு அது சந்தர்ப்பவாதமா? இப்படி இடையிலே உள்ள சிலர்; தேவையில்லாமல் வாலருந்த பல்லியைப் போல துள்ளுவதேன்? துடிப்பதேன்?