புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

30 ஜூன், 2013


           ""ஹலோ தலைவரே...… ராஜ்யசபா தேர்தலின்  போக்கும் முடிவுகளும் எப்படி இருக்கும்னு நம்ம நக்கீரன் ஆரம்பத்திலிருந்து  என்ன சொன்னதோ அதுதான் நடந்திருக்குது. இந்த ராஜ்யசபாவுக்காக கிடைச்ச ஆதரவு லோக் சபா  தேர்தலிலும் தொடருமாங்கிறதுதான் தமிழக அரசியலின் தற்போதை
ய ஹாட் சப்ஜெக்ட்.''நக்கீரன் 

""ஆமாப்பா.. இலங்கைப் பிரச்சினையைக் காரணம் காட்டி, மத்திய அரசிலிருந்தும் காங் கிரசுடனான கூட்டணியிலிருந்தும் விலகிய தி.மு.க., இப்ப எப்படி அதே காங்கிரசின் ஆதரவை ராஜ்யசபா தேர்தலுக்கு கேட்டு வாங்குதுன்னு பா.ம.க. அன்புமணி கேட்டிருந்தாரே.''…

""வடநாட்டு அரசியல் கட்சிகளெல்லாம், 2ஜி வழக்கில் கனி மொழி சிக்கியிருக்கிற நிலையில் காங்கிரஸ் ஆதரிப்பது ஏன், காங்கிரசுக்கும் இதில் பங்கிருப்பதை ஒத்துக்கொள்கிற தான்னு விமர்சனம் செய்யுது. காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் சந்தீப் தீட்சித்தோ, கனிமொழி  மீது வழக்குத்தான் உள்ளது. தீர்ப்பு வெளியாகாத நிலையில் அவரை எப்படி குற்றவாளி என்று சொல்ல முடியும்? மேலும், ராஜ்யசபா தேர்தலில் ஆதரவு அளித்ததற்கும் கூட்டணிக்கும் எந்த சம்பந்தமு மில்லைன்னு சொல்லியிருக்காரு. ஆனாலும், அரசியல் வட்டாரத்தில் இந்த சப்ஜெக்ட், ஹாட்டா விவாதிக்கப்படுதுங்க தலைவரே.''…

""சம்பந்தப்பட்ட கட்சிகள் இந்த ஆதரவு பற்றி என்ன நினைக்குதுங்கிறது முக்கியமான மேட்டர். தி.மு.க தொண்டர்களும் நிர்வாகிகளும் என்ன நினைக்கிறாங்க?''


""இலங்கைப் பிரச்சினையைக் காரணம் காட்டி, காங்கிரஸ் கூட்டணியிலிருந்து தி.மு.க. வெளியே வந்தபோது, ஊர் ஊருக்கு தி.மு.க தொண்டர்கள் பட்டாசு வெடிச்சி, ஸ்வீட் கொடுத்ததிலிருந்தே அவங்க மனநிலை என்னங் கிறது புரிஞ்சிருக்கும். இனி, காங்கிரஸ் உறவு வேண் டாம்ங்கிற எண்ணத்தில்தான் அவங்க இருந்தாங்க. .ஆனா, ராஜ்யசபா தேர்தலில் கலைஞர் நிறுத்திய வேட்பாளரா, விஜயகாந்த் நிறுத்திய வேட்பாளராங்கிற போட்டி வந்ததும், கனிமொழியா, இளங்கோவ னான்னுகூட தி.மு.க தொண்டர்கள் பார்க்கலை. கலைஞரா, விஜயகாந்த்தான்னுதான் பார்த்தாங்க. கலைஞர் ஜெயிக்கணும். அது எப்படி வேணும்னாலும் இருக்கலாம், காங்கிரஸ் சப்போர்ட் கிடைச்சாலும் தப்பு ஒண்ணுமில்லைங்கிற மனநிலைக்கு அவங்க வந்துட்டாங்க. அவங்க இதை ராஜ்யசபா தேர்தலுக்கான ஆதரவாகத்தான் பார்த்தாங்க. அதே நேரத்தில், இந்த உறவு லோக்சபாவுக்கும் தொடரு மோங்கிற சந்தேகம் தொண்டர்களிடம் இருக்குது.''

""அவங்க சந்தே கத்தைக் கட்சித் தலைமைதானே தீர்க்கணும்?'' 


""தி.மு.க தலைமையைப் பொறுத்த வரைக்கும் காங்கிர சுடனான கூட்டணி சம்பந்தமா எந்த மூவ்வும் இல்லை. அந் நிய முதலீடு  போன்ற விஷயங்களில் மத்திய காங்கிரஸ் அரசு கவிழாமல் தி.மு.க காப் பாற்றியது. அதுபோல, இனி நிறைவேற விருக்கும் மசோதாக் களுக்கும் தி.மு.க.வின் ஆதரவு காங்கிரஸ் அரசுக்குத் தேவை. அதனால் காங்கிரஸ் நம்மை ஆதரிக்கும்னு எதிர் பார்த்த தி.மு.க. தலைமை, முன்பு நம்மகிட்டே எம். எல்.ஏ.க்கள் பலம் இருந்தப்ப காங்கிரசின் ஜி.கே.வாசன், ஜெயந்திநடராஜன், சுதர்சன நாச்சியப்பன், ஞானதேசிகன் இவங்களெல்லாம் ராஜ்யசபா எம்.பியாவதற்கு எவ்வித நிபந்தனையுமின்றி ஆதர வளிச்சோம். அதுபோல, இப்பவும் எந்தவித நிர்பந்தமுமில்லாத ஆதரவைத்தான்  காங்கிரஸ்கிட்டே கேட்டோம். இது ஒரு இடைக்கால ஏற்பாடுதான். கூட்டணி யாரோடங்கிறதை தேர்தல் வரும்போது பார்த்துக்கலாம்னு நிர்வாகிகளிடம்  சொல்லியிருக்குது.''

""அப்படின்னா காங்கிரஸ் எந்த எதிர்பார்ப்பும் நிபந்தனையும் இல்லாமல்தான் தி.மு.க. வேட்பாளர் கனிமொழியை ஆதரிச்சிருக்குதா?''


""காங்கிரசோட கணக்கு என்னங்கிறதை போன முறையே பேசியிருந்தோம். எம்.பி. தேர்தல் வரும் வரையிலும் மத்தியில் உள்ள காங்கிரசுக்கு எந்த நெருக்கடி வந்தாலும், ஆட்சி கவிழாதபடி தி.மு.க. ஆதரவளிக்கணும்னு காங்கிரஸ் தரப்பிலிருந்து கேட்கப்பட்டிருக்குது. ராஜ்யசபா தேர்தலில் கொடுத்த ஆதரவு மூலமா எம்.பி. தேர்தலிலும் தி.மு.க. கூட்டணியைத் தக்க வச்சிக்க லாம்னு காங்கிரஸ் எதிர்பார்க்குது. ப.சிதம்பரத்தோட கணக்கும் இதுதான். தி.மு.க.வோடு இப்ப இருப்பது விடுதலை சிறுத்தைகளும் மனிதநேய மக்கள் கட்சியும்தான். புதியதமிழகம் கூட ராஜ்யசபாவுக்கான ஆதரவு மட்டும்தான் சொல்லியிருக்குது. பா.ம.கவும் திராவிடக் கட்சிகளோடு கூட்டணி இல்லைன்னு சொல்லிடிச்சி. ஒருவேளை, பா.ம.கவும் பு.த.வும் எம்.பி. தேர்தலில் தி.மு.க. கூட்டணியில் இடம்பிடித்தால்கூட அது சாதி-மதரீதியான கூட்டணி யாகத்தான் இருக்கும்னும், அ.தி.மு.க. அணியில் ம.தி.மு.க., சி.பி.எம்., சி.பி.ஐ. கட்சிகள் இருப்பதால அது அரசியல் கூட்டணியாப் பார்க்கப்படும்னும், அதனால கலைஞரும் தன்னோட கூட்டணியைப் பலப்படுத்த காங்கிரசின் தயவை நாடுவதைத் தவிர வேறு வழியில்லைன்னு டெல்லியில் சோனியா, அகமது பட்டேல், ஏ.கே.அந்தோணி இவங்க முன்னிலையில் ப.சி. சொல்லியிருக்காரு.''




""காங்கிரசின் டெல்லித் தலைமையோட கணக்கு என்ன?''


""அவங்களுக்கு எப்படியும் தமிழ்நாட்டில் ஒரு பலமான கூட்டணி வேணும். இப்போதைய நிலையில், அ.தி.மு.க. சரிப்படாது. அதனால தி.மு.க.வை எப்படியாவது தங்கள் பக்கம் கொண்டுவருவதோடு, தே.மு.தி.க.வையும் சரிக்கட்டி அழைத்துவந்துவிட்டால் மெகா கூட்டணியா அமைஞ்சிடும்னு யோசிக்கிறாங்க. தெலுங்கு நடிகர் சிரஞ்சீவி மாதிரி விஜயகாந்த்துக்கும் மத்திய அமைச்சர் பதவின்னு சொல்லி இழுத்திடலாம்ங்கிற கணக்கு ஓடிக்கிட்டிருக்குது. இலங்கைத் தமிழர் பிரச்சினையை வச்சித்தானே தி.மு.க வெளியேறியது. வரும் நவம்பரில் ஐ.நா.மனித உரிமை ஆணையத்தில் ஈழ விவகாரம் வரும்போது, பொது வாக்கெடுப்பு உள்ளிட்ட விஷயங்களை இந்தியாவே முன்னெடுத்தால், காங்கிரஸ் மீதான தமிழகத் தமிழர்களின் கோபமும் குறையும், தேர்தல் நேரத்தில் ஈழப்பிரச்சினையும் பெரிய இஷ்யூவா இருக்காதுன்னு காங்கிரஸ் நினைக்குதாம். மெகா கூட்டணி அமைந்தால் எம்.பி. தேர்தலில் அதிக சீட்டுகளை கைப்பற்றலாம்ங்கிறது காங்கிரஸ் கணக்கு.''

""அதற்கு விஜயகாந்த் ஒத்து வரணுமே?''

""அவர் காங்கிரஸ் மேலே செம கடுப்பிலே இருக்காரு. ஆதரவு தருவதா சொல்லி நம்மை ஃபீல்டில் இறக்கி விட்டுவிட்டு, நட்டாற்றில் விட்டுவிட்டுப்போனது போல காங்கிரஸ் ஏமாத்திடிச்சின்னும், நம்மகிட்டே ப.சி., வாசன், இளங்கோவன் எல்லோரும்  பேசினாங்க. நாமும் பேசினோம். ஆனா, கடைசியில தி.மு.க.வை ஆதரிச்சிட்      டாங்க. இதுதான் காங்கிரஸ் கலாச்சாரம். எப்படியும் எம்.பி. தேர்தலுக்கு நம்மகிட்டே வருவாங்க. அப்ப நான் யாருன்னு காட்டு றேன்னும் தே.மு.தி.க நிர்வாகிகள்கிட்டே முகம் சிவக்க சொல்லியிருக்காரு விஜயகாந்த்.'' 

""நம்பிக்கையா இருந்த தே.மு.தி.க ஏமாற்றமடைந்து, பதைபதைப்பா இருந்த தி.மு.க. சந்தோஷமானதுங்கிறது ராஜ்யசபா தேர்தலின் க்ளைமாக்ஸ் திருப்பம்தாம்ப்பா..


""சோனியா இந்த முடிவை எடுத்ததில் கலைஞருக்கு சந்தோஷம். கனிமொழியைக் கூப்பிட்டு, ஞான தேசிகனை நேரில் பார்த்து நன்றி தெரிவிக்கச் சொன்ன கலைஞர், கூடவே டி.ஆர்.பாலுவையும் எ.வ.வேலுவையும் துணைக்குப் போகச் சொல்லிட்டு, இன்னைக்குத்தான் நிம்மதியா தூங்கப்போறேன்னு சொல்லியிருக்காரு. படுக்கைக்குப் போறதுக்கு முன்னாடி, சோனியாவுக்கும் தமிழக காங்கிரசின் மேலிடப் பார்வையாளர் முகுல் வாஸ்னிக்கிற்கும் நன்றிக் கடிதமும் எழுதிட்டாரு.'' 

""கலைஞருக்கு ப.சிதம்பரம் ஒரு கடிதம் எழுதியிருக்காராமே?''


""ஆமாங்க தலைவரே.. … அதிலே, உங்க 90-வது பிறந்தநாளுக்கு என்னால வரமுடியலை. ஜூன் 6-ந் தேதி சென்னைக்கு வரும்போது சந்திக்கி றேன்னு உங்க கட்சியை சேர்ந்த என்னோட நண்பர் பழனிமாணிக்கத்துக் கிட்டே தகவல் சொல்லியிருந்தேன். ஆனா, அந்தத் தேதியிலே எங்கம்மா இறந்துட்டதால நான் மிகவும் துயரத்தில் இருந்தேன். அம்மாவின் இறுதிக்காரியங்களெல்லாம் முடிந்த பிறகு, இந்தக் கடிதத்தை எழுதுகிறேன். நீங்கள் 100 வயதைக் கடந்து இந்தியாவுக்கு வழிகாட்டணும்னு ப.சி. எழுதியிருக்காரு. ப.சி. சொல்லி அனுப்பிய தகவலை தன்னிடம் சொல் லாமல் விட்டவர்கள் மீது கலைஞருக்கு கடுமையான கோபமாம். தனக்கு வாழ்த்து சொன்ன ப.சி.க்கு நன்றிக் கடிதம் எழுதியதோடு, அதில் ப.சி.யின் தாயார் மறைவுக்கான தன்னோட ஆழ்ந்த இரங்கலையும் கலைஞர் தெரிவிச்சிருக்காரு.'' 

""அரசியல் வட்டார நடப்புகள் எல்லாத்தையும் கூட்டிக் கழிச்சிப் பார்த்தால் என்னென்னவோ கணக்கு கள் வருதே..''

""இப்போதைக்கு ராஜ்யசபா வெற்றிக் கணக்கு தான்… .. கனிமொழியின் வெற்றிக்காக ஸ்டாலின், டி.ஆர்.பாலு, பொன்முடி, எ.வ.வேலு நால்வரும் ஒருபக்கம் ஒர்க் பண்ணினாங்க. அதுபோல பா.ம.க.வின் ஆதரவுக்காக துரைமுருகன், ஜெகத்ரட்சகன், கே.என்.நேரு இவங்க மூணு பேரும் ஸ்டெப் எடுத்தாங்க. ஆனா, அது கைகொடுக்கலை. அதே நேரத்தில், தி.மு.க.வுக்கு ஆதரவா, வெளி எம்.எல்.ஏ.க்களை பர்ச்சேஸ் பண்ணுனா, அப்படியே கையும் களவுமா பிடிச்சி, சம்பந்தப்பட்ட எம்.எல்.ஏ. வாயாலேயே மீடியாக்களிடம் சொல்ல வச்சிடணும்னு பொறி வச்சிக் காத்திருந்தது மாநில உளவுத்துறை. எ.வ.வேலுவும் பொன்முடியும் கடைசி நிமிடம் வரைக்கும் ஸ்பெஷலா கண்காணிக்கப்பட்டாங்க. ஆனா, உளவுத்துறை எதிர்பார்த்த தீனி கிடைக்கலை.

""தே.மு.தி.க.வின் அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள்கிட்டேயும் ஆதரவு கேட்டு விஜயகாந்த் லெட்டர் எழுதியிருந்தாரு. ஜெ.வும் அவங்களை தே.மு.தி.க. வேட்பாளருக்கே ஓட்டு போடச் சொன்னாலும் சொல்லுவாருன்னு நாமும் பேசியிருந்தோம். ஆனா, அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் 7 பேரும் கடைசியில் அ.தி.மு.க. அணிக்கே வாக்களிச்சிருக்காங்களே… என்ன நடந்ததாம்?''


""அ.தி.மு.க.வுக்கும் சி.பி.ஐ.க்கும் அவங்க கூட்டணியிலேயே போதுமான எம்.எல்.ஏக்கள் பலம் இருந்ததால, தே.மு.தி.க. அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் 7 பேரையும் தேர்தல் புறக்கணிப்பு செய்யச் சொல்லிடலாம்னுதான் அ.தி.மு.க. தலைமை முடிவெடுத்ததாம். கட்சித்தாவல்-கொறடா உத்தரவுங்கிற சர்ச்சைகளும் வராமல் இருக்கும்னு நினைச்சிருக்குது. ஆனா, தேர்தலுக்கு முதல் நாள் அ.தி.மு.க எம்.எல்.ஏக்களுக்கு மாதிரி  வாக்களிப்புத் தேர்தலை அ.தி.மு.க. மேலிடம் நடத்தியது. அதில் 2 எம்.எல்.ஏ.க்கள் செல்லாத ஓட்டுப் போட்டிருக்காங்க. இந்த மாதிரி ஏதாவது ஏடாகூடமா நடந்தால் அ.தி.மு.க.-சி.பி.ஐ. வேட்பாளர்களின் வெற்றி பாதிக்கப்படும்ங்கிறதாலதான், அதிருப்தி தே.மு.தி.க எம்.எல்.ஏ.க்கள் 7 பேருக்கும் அ.தி.மு.க. கூட்டணிக்கு வாக்களிக்கும்படி கடைசி நேரத்தில் உத்தரவு வந்தி ருக்குது. அதன்படிதான் அவங்க ஓட்டுப் போட்டிருக்காங்க.''

""ஓ''…

""அதுமட்டுமில்லீங்க தலைவரே.. .. காங்கிரஸ் ஆதரவு உறுதியானதும் கனிமொழியின் வெற்றியும் உறுதியாயிடிச்சி. அதற்கப்புறம் தே.மு.தி.க.வின் அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் 7 பேர் ஓட்டுப்போட்டாலும் தே.மு.தி.க வேட்பாளர் இளங்கோவன் ஜெயிக் கப்போறதில்லைன்னு புரிஞ்சிக்கிட்ட ஜெ.,  தி.மு.க.வா தே.மு.தி.க.வான்னு பார்த்தால், தி.மு.க ஜெயிப்பதுதான் நமக்கு அரசியல் ரீதியா சரியா இருக்கும்னும், விஜயகாந்த் அரசியல் செய்யவே தகுதியில்லாதவர்னும் அ.தி.மு.க.வினரிடம் சொல்லியிருக் காரு. அதே நேரத்தில், விஜயகாந் தும் தீவிர ஆலோசனையில் இருக் காராம். ஆதரவு கேட்டு அதிருப்தி எம்.எல்.ஏ.க்களுக்கு கடிதம் எழு தியதற்கு காரணமே, அதைத் துருப்புச் சீட்டா பயன்படுத்தத்தான். 7 பேரும் அ.தி.மு.க. அணிக்கு ஆதரவா வாக்களித்திருப்பதால் அவர்கள் மீது வழக்குப் போடுவதா கட்சியிலிருந்து நீக்குவதா, நீக்கினால் எதிர்க்கட்சித் தலைவர் அந்தஸ்து தனக்கு இருக்குமான்னு ஆலோ சனை நடத்துறாராம்.''

""ஜெ.வின் கொடநாடு பயணம்?''


""ராஜ்யசபா தேர்தல் அவர் எதிர் பார்த்தபடி முடிந்ததால, கொடநாடு பயணம்தான். அங்கே அமைச்சரவை மாற்றத்திற்கான காய்கள் நகர்த்தப் படும்னு மந்திரிகள் வட்டாரம் மிரண்டு போயிருக்குது. அதைப் பற்றி நான் சொல்றேன். கோட்டையில் எல்லோ ருடைய பார்வையும் ஓ.பன்னீர் மேலே பதிஞ்சிருக்குது. எதிர்பார்ப்பு லிஸ்ட்டில் நயினார்நாகேந்திரன், சங்கரன் கோவில் முத்துச்செல்வி இவங்க ளெல்லாம் இருக்காங்க. பரமக்குடி சுந்தர்ராஜனை தூக்கிட்டு முத்துச் செல்வியை மந்திரியாக்குவதா ஓ.பன்னீர் வாக்குக் கொடுத்திருக் காராம்.'' 

 லாஸ்ட் புல்லட்

சி.பி.ஐ.யின் ரிப்போர்ட்டை குற்றம் சாட்டப் பட்டவருக்கே லீக் செய்த அதன் முன்னாள் எஸ்.பி.யும் தற்போதைய விழுப்புரம் டி.ஐ.ஜி.யுமான முருகன் மீது முதல் கட்ட விசாரணை தொடங்கிவிட்டது. கஸ்டம்ஸ் ஜாயிண்ட் கமிஷனர் கிளிட்டஸை டெல்லி சி.பி.ஐ. அதிகாரிகள் 4 மணி நேரம் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தியுள்ளனர். அடுத்த கட்டமாக அவர்கள் டி.ஐ.ஜி. முருகனை விசாரிக்கப் போகிறார்களாம்.

டம்மி பதவியில் நியமிக்கப்பட்டுள்ள முன்னாள் உள்துறை செயலாளர் ராஜகோபால் எப்படியாவது ஜெ.வை சந்தித்து நல்ல துறை வாங்கிவிட பகீரத முயற்சியில் ஈடுபட்டார். கடந்த திங்களன்று கோட்டையில் முதல்வர் அறைக்கே சென்று காத்திருந்தும், வெளியே வந்த ஜெ. அவரைக் கண்டு கொள்ளவில்லை. காரில் ஏறப்போகும்போது வேகமாக ஓடிவந்து, மேடம் என்று கணீரெனக் குரல் கொடுத்தார் ராஜகோபால். சுற்றி யிருந்த அதிகாரிகள் மிரண்டுபோக, ஜெ.எதுவும் கண்டுகொள்ளாமல் தன் காரை எடுக்கச் சொல்லிவிட்டார். அப்செட்டான ராஜகோபால், மத்திய அரசு பணிக்கு செல்ல விரும்புவதாக தலைமைச் செயலாளர் ஷீலாபாலகிருஷ்ணனுக்கு கடிதம் எழுதியுள்ளார்.

அமைச்சர் செல்லூர் ராஜூவின் ஒரே மகன் தமிழ்மணியின் முதலாம் ஆண்டு நினைவுதினத்தையொட்டி மதுரையில் போஸ்டர்கள், விளம்பரங்கள் ஆகியவை வெளிப்பட்டதுடன் நினைவேந்தல்- அன்னதான  நிகழ்ச்சிகளும் நடைபெற்றன. இதனை அமைச்சரின் எதிர்கோஷ்டி கணக்கெடுத்து, தேவர் குருபூஜையைவிட அமர்க்களமாக செலவு செய்திருக்கிறார்கள். தலைமையின் உத்தரவை மீறி, தனது படத்துடன் விளம்பரங்களை அமைச்சர் செல்லூர் ராஜூ அனுமதித்திருக்கிறார் என மேலிடத்திற்குப் போட்டுக் கொடுத்துள்ளது. ஒரே மகனின் நினைவேந்தலைக் கூடவா சொந்தக்கட்சிக்காரர்கள் அரசியலாக்குவார்கள் எனப் புலம்புகிறது மந்திரி தரப்பு.

குன்னூர் வெலிங்டன் ராணுவ முகாமில் பயிற்சி பெற்றுவந்த சிங்கள ராணுவத்தினர், தமிழர்களின் கடும் எதிர்ப்பினால் வெளி யேற்றப்பட, அங்கே மதி.மு.க திட்டமிட்டிருந்த ஆர்ப்பாட்டத்தைப் பொதுக்கூட்டமாக மாற்றினார் வைகோ. தனித்தனி இயக்கமாகப் பிரிந்து செயல்படும் பெரியாரிஸ்ட்டுகள் கொளத்தூர் மணியும் கோவை ராமகிருஷ்ணனும் இந்தப் பொதுக்கூட்டத்தில் ஒன்றாகக் கலந்துகொண்டு உணர்வுகளை வெளிப்படுத்தினார்கள். நிறைவுரை யாற்றிய வைகோ, ""இனியும் சிங்களர்களுக்கு இந்தியாவில் பயிற்சி அளித்தால், தமிழகம் இந்தியாவின் அண்டை நாடாக மாறிவிடும். இங்குள்ள தமிழ் ராணுவவீரர்களே, உங்களை மனசாட்சிக்குப் புறம்பாக ராணுவ அதிகாரிகள் நடக்கச் சொன்னால்  அந்த செயலைச் செய்யாதீர்கள். இப்படிச் சொல்வதால், தேசத்துரோகக் குற்றச்சாட்டில் என்னைக் கைதுசெய்தாலும், இந்த வைகோ அதைத் தொடர்ந்து செய்துகொண்டே இருப்பான்'' என முழங்கினார்.  

ad

ad