ஞானசேகரனை அர்ச்சனை செய்த தொண்டர்கள்.படங்கள்
வேலூர் மாவட்ட காங்கிரஸ் கட்சியின் கூட்டம் பழைய மாநகராட்சி அலுவலகம் எதிரேயுள்ள காங்கிரஸ் கட்சியின் மாவட்ட அலுவலகத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
கூட்டம் கட்சியின் மாநில பொதுசெயலாளர் மாஜி எம்.எல்.ஏ ஞானசேகரன் தலைமையில் நடைபெற்றது.
அப்போது முன்னால் கவுன்சிலர் ஜெயப்பிரகாஷ் தலைமையில் வந்த காங்கிரஸ் தொண்டர்களுக்கும், ஞானசேகரன் ஆதரவாளர்களுக்கும் இடையே மோதல் ஏற்படும் நிலை ஏற்பட்டது.
இளைஞரணி பொது செயலாளர் பழனி அவர்களை தடுத்து சமாதானப்படுத்தினர். கூட்டத்தில் அனுமதிக்கப்படாத முன்னால் ந.செ தேவகிரி, ஜெயப்பிரகாஷ் தலைமையிலான காங்கிரஸ் தொண்டர்கள், ஞானசேகரன் தரப்பை அவ்வளவு படு மோசமாக விமர்சனம் செய்தனர்.
பிரச்சனை ஏற்படுகிறதே என தடுக்க வந்த போலீசாரை உட்கட்சி பிரச்சனை என வெளியே அனுப்பிவிட்டனர்.