புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

25 ஜூன், 2013

இந்தியாவின் சிறப்புத் தூதுவர் நியமனத்தை இலங்கை நிராகரித்தது
இலங்கைக்கான சிறப்புத் தூதுவர் ஒருவரை நியமிக்கும் இந்தியாவின் திட்டத்துக்கு இலங்கை அரசு எதிர்ப்புத் தெரிவித்துள்ளதாக கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.
புதுடில்லிக்குக் கொடுத்த வாக்குறுதியை மீறி 13வது திருத்தச்சட்டத்தை நீர்த்துப் போகச் செய்யும் இலங்கை அரசாங்கத்தின் நகர்வுகளை அடுத்து, இந்தியாவின் மூத்த இராஜதந்திரியான ஹர்தீப்சிங் பூரியை இலங்கைக்கான சிறப்புத் தூதுவராக நியமிப்பது குறித்து ஆராய்ந்து வருவதாக தகவல்கள் வெளியாகியிருந்தன.
இந்தநிலையில், சிறப்புத் தூதுவர் ஒருவரை நியமிப்பதற்கு  இலங்கை அரசாங்கம் அதிகாரபூர்வமான எதிர்ப்பை வெளியிட்டுள்ளது.
கடந்தவாரம் புதுடெல்லியில் உள்ள  இலங்கைத் தூதுவர் பிரசாத் காரியவசம், இந்திய வெளிவிவகார அமைச்சு பணியகமான சவுத் புளொக்கிற்குச் சென்று பேச்சு நடத்தியுள்ளார்.
இதன்போதே, இருதரப்பு விவகாரங்களைக் கையாள்வதற்கு சிறப்புத் தூதுவர் ஒருவரை நியமிக்கும் இந்தியாவின் திட்டத்துக்கு இலங்கை அரசின் கடுமையான எதிர்ப்பை பிரசாத் காரியவசம் வெளிப்படுத்தியுள்ளார் என்றும் கொழும்பு ஆங்கில ஊடகம் தகவல் வெளியிட்டுள்ளது.

ad

ad