புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

25 ஜூன், 2013

நாடாளுமன்ற தேர்தலில் தமிழ்நாட்டை மத்தியில் ஆளும் காங்கிரஸ் இழப்பது உறுதி! கி.வீரமணி அறிக்கை! 
பொதுத்துறை நிறுவனமான நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தின் பங்குகளைத் தனியார்க்கு விற்பது பொருளாதாரத்தில் மட்டும்
மக்களுக்கு இழப்பு மட்டுமல்ல; சமூக நீதி - இடஒதுக்கீட்டுப் பறிப்பு என்ற ஆபத்தான போக்காகும் என்று திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் 24.06.2013 திங்கள்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, 
நெய்வேலி (லிக்னைட்) பழுப்பு நிலக்கரி நிறுவனம், நாட்டிலேயே லாபத்தில் இயங்கும் நவரத்தினங்கள் என்ற 9 பொதுத்துறை நிறுவனங்களுள் ஒன்று. 
அதனைத் தனியாருக்குத் தாரை வார்க்க மத்தியில் உள்ள மன்மோகன்சிங் அரசு மெல்ல ஒட்டகம் கூடாரத்திற்குள் நுழைவதைப் போல, 5 சதவிகிதம் என்று துவங்கி (ஏற்கெனவே சில பங்குகள் விற்பனை செய்யப்பட்டிருப்பதாகவும் தெரிகிறது) தனியாருக்கு விற்பதை எதிர்த்து, அங்கே பணிபுரியும் தொழிலாளர்கள் மட்டுமல்ல, தமிழ்நாட்டில் உள்ள ஆளுங்கட்சி, எதிர்க் கட்சிகளும், மத்தியில் அய்க்கிய முற்போக்குக் கூட்டணியில் இடம் பெற்றிருந்த தி.மு.க. உட்பட அத்தனைக் கட்சியினரும் குரல் கொடுத்தனர்; அதைக் கண்டு அத்திட்டத்தைத் தள்ளி வைத்தவர்கள் ‘மீண்டும் வேதாளம் முருங்கை மரம் ஏறிற்று’ என்ற பழமொழிக்கேற்ப, நேற்று முன்தினம் கூடிய மத்திய அமைச்சரவை, தமிழக மக்களின் எதிர்ப்பை புறந்தள்ளி அலட்சியப்படுத்தி விட்டு, 5 சதவிகித பங்குகளை விற்க அனுமதி வழங்கிவிட்டதாம்!

ஏற்கெனவே ‘பொன்’ முட்டை இடும் இந்த வாத்தைக் கொல்லாதீர்கள் என்று திராவிடர் கழகம் அறிக்கைவிட்டு அறப்போர் நடத்தியுள்ளது.
தி.மு.க. தலைவர் கலைஞர் அவர்கள் மத்திய அரசுக்கு (இந்த விற்பனை மூலம்)  வெறும் 466 கோடி ரூபாய்தான் கிடைக்கக் கூடும். அரசுக்கு இது ஒரு பெரும் தொகையில்லை என்றும் சுட்டிக்காட்டியுள்ளது மத்திய அரசு மிகவும் சீர் தூக்கிப் பார்க்க வேண்டிய ஒன்றாகும்! 
ஒரு பொதுத்துறை நிறுவனம் தனியார்மயமாக மாறினால், பொருளாதாரத்தில் மக்களுக்கு இழப்பு ஏற்படுவது என்பது ஒருபுறம் இருந்தபோதிலும்கூட, மற்றொரு முக்கிய கண்ணோட்டம் சமூகநீதி - இடஒதுக்கீட்டுக் கொள்கையைக் குழி தோண்டிப் புதைப்பதாகவும் ஆகிவிடும்.
காரணம் தனியார் துறை என்றால் இடஒதுக்கீட்டுக் கொள்கைப்படி நியமனங்கள் செய்ய வேண்டிய சட்டக் கட்டாயம் (இன்றைய நிலைப்படி) இல்லை; பொதுத்துறை நிறுவனத்தில் சமூகநீதி இடஒதுக்கீடு, கட்டாயம் பின்பற்றப்பட வேண்டும் என்பது அரசியல் சட்டப்படி உள்ள தாக்கீதாகும்.
எனவே, இந்த முடிவை மத்திய அரசு உடனடியாகக் கைவிட வேண்டும்; இதை மறு பரிசீலனை செய்யா விட்டால் தமிழ்நாட்டை மத்தியில் ஆளும் காங்கிரஸ் இழப்பது (நாடாளுமன்ற தேர்தலில்) உறுதி! உறுதி!!
இவ்வாறு கூறியுள்ளார். 

ad

ad