புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

31 ஆக., 2013

புலிகள் இயக்க உறுப்பினர்கள் இருவர் சென்னையில் கைது: இந்திய ஊடகம்

இந்தியாவின் கடலூரில், வெடிகுண்டு சோதனை நடத்திய வழக்கில் தேடப்பட்டு வந்த விடுதலை புலிகள் அமைப்பைச் சேர்ந்த இருவர் நேற்று சென்னையில்
கைது செய்யப்பட்டுள்ளதாக இந்திய ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
விடுதலைப் புலிகள் அமைப்பைச் சேர்ந்த  சிவனேசன் மற்றும் மகேஸ்வரன் என்ற கோபி என்ற இருவருமே கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இது குறித்து மேலும் தெரிவிக்கப்படுவது,
முள்ளிவாய்க்கால் சம்பவத்தை தொடர்ந்து, கடந்த ஆண்டு டிசம்பர் மாதம், இவர்கள் இருவரும், இலங்கையின் முக்கிய பகுதிகளில் குண்டு வைக்க திட்டமிட்டனர்.
இத்திட்டத்தை செயல்படுத்த, முன் சோதனை செய்வதற்காக, தமிழகத்திற்கு தப்பிச் சென்றுள்ளனர்.
இவர்கள், கடலூர் மாவட்டத்தின் முந்திரிக் காட்டில், மேலும் நால்வருடன் சேர்ந்து, சோதனை முயற்சியில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து, கியூ பிரிவு பொலிஸாருக்கு தகவல் கிடைத்தது. பொலிசார் விரைந்து சென்று சோதனையிட்ட போது, உடன் இருந்த, நால்வரும் பிடிபட்டனர். சிவனேசன், கோபி இருவரும் தப்பிவிட்டனர்.
இவர்களை, பொலிசார் தேடி வந்தனர். இந்நிலையில், சென்னையில் சிவனேசனும், கோபியும் சுற்றித் திரியும் தகவல் கிடைத்து, அவர்கள் இருவரையும், நேற்று கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

ad

ad