புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

29 அக்., 2013

புலிகளுக்கு ஆயுதம் வாங்க முயன்ற கனேடியத் தமிழர் சுரேசுக்கு 2 ஆண்டு சிறைத்தண்டனை

விடுதலைப் புலிகளுக்கு ஆயுத தளபாடங்களை வாங்க உதவியதாக, குற்றம்சாட்டப்பட்ட கனேடியத் தமிழரான சுரேஸ் சிறீஸ்கந்தராஜாவுக்கு அமெரிக்க நீதிமன்றம் இரண்டு ஆண்டு சிறைத்தண்டனை விதித்துள்ளது. 

கனடாவின் வாட்டர்லூ பல்கலைக்கழகத்தில் பயின்ற போது, விடுதலைப் புலிகளுக்கு நிதி திரட்டி, வான் பொறியியல் கருவிகள், நீர்மூழ்கிகள், போர்க்கப்பல்களின் வடிவமைப்புகள் தொடர்பாக ஆயவு செய்து பெற்றுக் கொடுக்கவும், இரவுப்பார்வை கருவிகள் மற்றும் தொடர்பாடல் கருவிகளையும் வாங்கிக் கொடுக்கவும் முயன்றதாக, 2006ம் ஆண்டில் சுரேஸ் அமெரிக்காவில் வைத்துக் கைது செய்யப்பட்டார்.

இவருக்கு எதிராக, தீவிரவாத அமைப்புக்கு உதவியதாக குற்றம்சாட்டப்பட்டு அமெரிக்க நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்கப்பட்டது.

இந்த வழக்கில் சுரேஸ் சிறீஸ்கந்தராஜா கடந்த ஜுலை மாதம் தனது குற்றத்தை ஒப்புக்கொண்டிருந்தார்.

இதையடுத்து இவருக்கு 15 ஆண்டு சிறைத்தண்டனை விதிக்க வேண்டும் என்று அமெரிக்க அரசு சட்டவாளர் நீதிபதியிடம் கோரியிருந்தார்.

எனினும், இவருக்கு இரண்டு ஆண்டுகள் சிறைத்தண்டனையை மட்டும் மாவட்ட நீதிபதி ரேமன்ட் டியரி நேற்று அளித்துள்ளார்.

ஏற்கனவே அமெரிக்காவில் இவர் 10 மாதங்கள் சிறைத்தண்டனையை அனுபவித்து விட்டநிலையில், எஞ்சிய 14 மாத சிறைத்தண்டனையை அனுபவித்தால் போதும் என்றும் நீதிபதி கூறியுள்ளார்.

33 வயதான சுரேஸ், அண்மையில் தான் திருமணமானவர். ஒட்டாவா பல்கலைக்கழகத்தில் சட்டம் பயின்று வந்தவராவார்.

ad

ad