புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

29 அக்., 2013

தமிழர்களின் பின்னால் நிற்பது இந்தியாவின் கடமை - சல்மான் குர்ஷித்

வடக்கு மாகாணத்தில் தெரிவு செய்யப்பட்டுள்ளவர்களின் பின்னாலேயே இந்தியா நிற்க வேண்டும் என்று இந்திய வெளிவிவகார அமைச்சர் சல்மான் குர்ஷித் தெரிவித்துள்ளார். 

புதுடெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,

“கொமன்வெல்த் மாநாட்டுக்கு செல்வது குறித்து பிரதமர் எந்த முடிவையும் அறிவிக்கவில்லை. ஆனால் நான் மாநாட்டில் பங்கேற்கிறேன்.

வெளிவிவகாரச் செயலர்களின் அமர்வில், இந்திய வெளிவிவகாரச் செயலர் சுஜாதா சிங் பங்கேற்பார்.

வடக்கு மாகாணத்தில் உள்ள தமிழர்கள், இந்தியாவிடம் இருந்து பெரியளவிலான எதிர்பார்ப்பைக் கொண்டுள்ளனர்.

இவர்களின் பின்னால் நிற்பது இந்தியாவின் கடமை.

வடக்கு மாகாணத்தில் தெரிவு செய்யப்பட்டுள்ள மக்களுடன் நிற்க வேண்டிய கடப்பாடு எமக்கு உள்ளது.

நாம் போராடி, அழுத்தம் கொடுத்து அங்கு தேர்தலை நடத்த வைத்துள்ளோம்.

30 ஆண்டுகளில் முதல் முறையாக அங்கு தேர்தல் நடத்தப்பட்டுள்ளது.

அங்கு ஒரு முதலமைச்சர் இருக்கிறார். அவர்களை நாம் கைவிட முடியாது. நாம் அவர்களுடன் நிற்க வேண்டும்.

அவர்கள் எதனை அடைவதற்காக தெரிவு செய்யப்பட்டார்களோ அதனை அடைவதற்கு நாம் உதவ வேண்டும்.

கொமன்வெல்த் மாநாட்டில் இந்தியப் பிரதமர் பங்குபற்றுவதை எதிர்க்கும் தமிழ்நாட்டிலுள்ள அரசியல் கட்சிகள், வடக்கு மாகாணத்தில் உள்ள தமிழர்கள் என்ன சொல்கிறார்கள் என்று பார்க்க வேண்டும்.

அவர்கள் இப்போது களநிலவரங்களை புரியாமல், குருடாக இருக்க முடியாது.

அங்கு வடக்கு மாகாணத்தில் ஒரு தெரிவு செய்யப்பட்ட அரசாங்கம் உள்ளது” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

ad

ad