புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

29 அக்., 2013

சென்னை செண்ட்ரல் ஆஸ்பத்திரியில் அம்மா உணவகத்தில்5 ரூபாய்க்கு 3 சப்பாத்தி 2 ரூபாய்க்கு டீ 
சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் அம்மா உணவகம் விரைவில் திறக்கப்படுகிறது.   6000 சதுர அடியில் அனைத்து வசதிகளுடன் இந்த உணவகம் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு காலையில்
ஒரு ரூபாய்க்கு ஒரு இட்லி, மதியம் சாம்பார், தயிர், கருவேப்பிலை மற்றும் மூலிகை சாதங்கள் விற்கப்பட உள்ளது.


மாலையில் சப்பாத்தி அறிமுக செய்யப்படுகிறது. 3 சப்பாத்திகள் கொண்ட ஒரு செட்டிற்கு விலை ரூ.5, ஒரு கப் டீ–ரூ2 விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. மற்ற அம்மா உணவகங்களில் இல்லாத வகையில் இந்த கேண்டீனில் பல வசதிகள் செய்யப்பட்டுள்ளன.
புற நோயாளிகள், பார்வையாளர்கள், ஆயிரக்கணக்கான பேர் இதில் பயன்பெறக்கூடிய வகையில் அதிகளவு உணவு தயாரிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான நவீன சமையல் கூடம் அமைக்கப்பட்டுள்ளது. இட்லி தயாரிக்க 3 பெரிய அளவிலான பாத்திரங்கள் பயன்படுத்தப்படுகின்றன. 7 நிமிடத்தில் 960 இட்லி தயாரிக்கும் வசதி இங்கு உள்ளது.
ஒரே நேரத்தில் 400 பேர் சாப்பிடக்கூடிய வகையில் இடவசதி அளிக்கப்பட்டள்ளது. சாப்பிடுவதற்கு 40 மேஜைகள் போடப்படுகிறது. ஒரு மேஜைக்கு 5 பேர் வீதம் 200 பேர் உட்கார்ந்து சாப்பிடலாம். 200 பேர் நின்று கொண்டு சாப்பிடலாம். சாப்பிடக்கூடிய தட்டுகளை உடனுக்குடன் கழுவ அதற்குரிய டிஷ்வாஷர் பயன்படுத்தப்படுகிறது. சுத்தமாகவும், சுகாதாரமாகவும் உணவு தயாரித்து வழங்க ஊழியர்களுக்கு அறிவுறு த்தப்பட்டுள்ளது.
உணவகத்தில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் (ஆர்.ஓ) வினியோகம் செய்யப்பட உள்ளது. ஒரு மணி நேரத்துக்கு 2000 லிட்டர் குடிநீர் அதில் கிடைக்கும். உணவகம் முழுவதும் 48 மின் விசிறிகள் பொறுத்தப்பட்டுள்ளது.
காலை, மதியம், இரவு ஆகிய மூன்று வேளையும் அம்மா உணவகத்தில் குறைந்த செலவில் சாப்பிட வசதிகள் செய்யப்பட்டுள்ளது. அங்கு பணியாற்றும் ஊழியர்களுக்கு கழிவறை வசதியும் செய்யப்பட்டுள்ளது.
சென்னை அரசு ஆஸ்பத்திரியில் அமைந்தள்ள அம்மா உணவகத்தில் அனைத்து பணிகளும் நிறைவடைந்து திறப்பு விழாவிற்கு தயார் நிலையில் உள்ளன.

ad

ad