புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

1 அக்., 2013

காட்டுக்கு மேயச்சென்ற மாட்டு கூட்டத்துடன் ஊருக்குள் வந்த யானைக்குட்டி
கேரள மாநிலம் பாலக்காடு மன்னர் காட்டுப்பகுதி அருகே அட்டப்பாடி என்ற இடம் உள்ளது. இங்கு ஆதிவாசிகள் வசித்து வருகிறார்கள்.



இவர்களது மாடுகள் அந்த பகுதியில் உள்ள புதூர் வனத்தில் மேயச்சென்றன. காலையில் சென்ற மாடுகள் மாலையில் ஊருக்கு திரும்பியது. இந்த மாடுகள் கூட்டத்துடன் ஒரு யானைக்குட்டியும் ஊருக்குள் வந்து விட்டது.
காட்டில் தாயை விட்டு பிரிந்த அந்த யானைக்குட்டி வழி தவறி மாட்டுக்கூட்டத்துடன் ஆதிவாசி குடியிருப் புக்கு வந்தது தெரிய வந்தது. அந்த யானைக்குட்டியை ஆதிவாசிகள் மீட்டு உணவு கொடுத்தனர்.
அந்த குட்டி யானைக்கு பவானி என்று பெயர் சூட்டி பராமரித்தனர். மேலும் யானைக்குட்டி வழி தவறி தங்கள் கிராமத்துக்கு வந்த தகவலை வனத்துறையினருக்கும் தெரிவித்தனர்.
உடனே வனத்துறையினர் அந்த ஆதிவாசி குடியிருப்புக்கு விரைந்து சென்று யானைக்குட்டியை பரிசோத னை செய்து பார்த்தனர். அது ஆரோக்கியமாக இருந்ததால் அந்த யானைக் குட்டியை வனத்துறை அலுவலகத்திற்கு அழைத்துச் சென்றனர்.

ad

ad