புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

12 அக்., 2013

அரசியலில் ஈடுபடுபவர்கள் மக்களின் உணர்வுகளை புரிந்து சேவையாற்ற வேண்டும்- வடமாகாண முதலமைச்சர் 
அரசியலில் ஈடுபடுபவர்கள் மக்களின் தேவைகளையும் உணர்வுகளையும் அறிந்து செயற்படவேண்டும். சுயலாபங்களுக்காக மக்களை மீண்டுமொரு கலவரத்துக்குள் கொண்டு செல்லவிடாது செயற்பட
வேண்டும் என வடமாகாண முதலமைச்சர் சி.வி விக்கினேஸ்வரன் தெரிவித்தார்.
 
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வடமாகாண சபை உறுப்பினர்களிற்கான பதவிப்யேற்பு நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
 
மேலும் அவர் தெரிவித்தாவது,
 
பல்வேறுபட்ட துன்பங்களுக்கு உள்ளான நிலையில் இப்போது எமது மக்கள் எழுந்து நிற்கப் பழகியுள்ளனர்.மக்களுக்கான தேவைகள் தற்போது அதிகம் உள்ளது.அவற்றை அறிந்து பொதுவாழ்க்கையில் ஈடுபடவுள்ளவர்கள் செயற்பட வேண்டும்.அவர்கள் மக்களின் வளர்சிக்கு உறுதுணையாக இருக்க வேண்டடும்.அவ்வாறு இல்லாமல் பதவிக்காகவும் பணத்திற்காகவும் அரசியலை பயன்படுத்தும் நிலை மாறவேண்டும் என்றார்.
 
தற்போது நாம் வன்முறைக் காலத்திலிருந்து மாறி வந்துள்ளளோம்.மக்களை கைப்பொம்மைகளாக நினைத்த காலம் மலையேறிவிட்டது. இத்தகைய நிலையில் மக்களில் தேவைகளை அறிந்து நாம் ஒன்றாக செயற்படவேண்டும் என சி.வி விக்கினேஸ்வரன் தெரிவித்தார்.

ad

ad