புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

12 அக்., 2013

 தமிழர்களுக்கான நிரந்தர தீர்வை வழங்குவதிலிருந்து அரசு தப்பிக்க முடியாது- த.தே.கூ தலைவர் சம்பந்தன் 
தமிழர்களுடைய தனித்துவத்தை பேணிப் பாதுகாக்கக் கூடிய வகையில் நாட்டிற்குள்ளே ஒரு அரசியல் தீர்வைக் காண நாங்கள் தயாராகவுள்ளோம்.இதற்கு சர்வதேசமும் ஒத்துழைப்பு வழங்குகிறது.ஆனால் அதனை இலங்கை அரசு தட்டிக் கழிக்கிறது என தமிழ் தேசியக்கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் தெரிவித்துள்ளார்.
 
யாழ். வீரசிங்கம் மண்டபத்தில் இன்று காலை நடைபெற்ற வடமாகாண சபை உறுப்பினர்களின் சத்திய பிரமாண நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனை தெரிவித்தார்.
 
அவர் அங்கு மேலும் தெரிவித்ததாவது,
 
தமிழர்களுக்கு நிரந்தரமாகவும் நியாயமானதுமான தீர்வு கிடைக்க வேண்டும்.தமிழர்கள் நாட்டில் பாதுகாப்பாகவும் கௌரவமாகவும் வாழக் கூடிய வகையில் தீர்வு அமைய வேண்டியது அவசியம்.அதனை அரசு தட்டிக் கழிக்க முடியாது.
 
இன்று தமிழர்களுடைய பிரச்சினை சர்வதேசமயப்படுத்தப்பட்டுள்ளது.அதற்கான காரணம் இலங்கை அரசு தமிழர்களுடைய பிரச்சினைக்கு சரியான தீர்வைப் பெற்று தராமையே.சர்வதேசம் பல்வேறுபட்ட அழுத்தங்களை இலங்கை அரசிற்கு ஏற்படுத்திய போதும் தமிழர் பிரச்சினைக்கு சரியான தீர்வை அரசு வழங்கவில்லை.இதனை இலங்கை அரசு தட்டிக் கழிக்குமானால் பாரதூரமான விளைவை சந்திக்கும் என்றார்.
 
இலங்கை அரசிற்கும் தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்கும் இடையில் 2011 ஆம் ஆண்டு பேச்சு வார்த்தை இடம்பெற்றது. ஆனால் அதனால் எந்தப் பயணும் எமக்கு கிடைக்கப்பெறவில்லை.எமது கட்சி பேச்சு வார்த்தை இடம்பெற முன்னிற்கின்றது.ஆனால் பயனற்ற பேச்சில் பங்குபெற நாங்கள் தயாரில்லை.நியாயபூர்வமான வகையில் பேச்சு வார்த்தை இடம்பெறுமெனின்  நாங்கள் தயாராகவுள்ளோம் என தமிழ் தேசியக்கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் தெரிவித்துள்ளார்.
 
இதேவேளை, குறித்த நிகழ்வில் கலந்து கொண்ட த.தே.கூ.பாராளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவன் உரையாற்றியதாவது,
 
வடக்கு மாகாணசபை முதலமைச்சர் விக்னேஸ்வரனின் பதவியின் கீழ் ஒட்டு  மொத்த உறுப்பினரும் உள்வாங்கப்பட்டுள்ளனர்.இதிலுள்ளவர்கள் மக்களுக்கு சேவை செய்வதற்குத்தான், அமைச்சர் என்ற பதவியை வைத்துக் கொண்டு தான் சேவை செய்ய வேண்டும் என்ற எண்ணம் தேவையற்றது என்றார். 
 
மேலும்,மக்கள் சேவையின் போது எல்லோரையும் ஒரே மாதிரியாகப் பார்க்க வேண்டும். எவ்வளவு சந்தர்ப்ப சூழ்நிலை வந்தாலும் தனது சேவையிலிருந்து மாறக் கூடாது என்பது ஒவ்வொரு உறுப்பினரது அடி மனதிலிருந்தும் எழ வேண்டும்.குறித்த தேர்தல் அமோக வெற்றியானது கூட்மைப்புக்குக் கிடைத்த வாக்குதான் என்பதை உணர்ந்து செயற்படவேண்டும் எனத் தெரிவித்தார்.

ad

ad