புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

21 நவ., 2013

 சிறிலங்கா அரசுக்கு வருகிறது அடுத்த சோதனை; சர்ச்சையில் பொதுநலவாய விளையாட்டுப் போட்டி
சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச பொதுநலவாய அமைப்புக்கு தலைமை தாங்கும் நிலையில், அடுத்த ஆண்டு ஸ்கொட்லாந்தில் நடக்கவுள்ள பொதுநலவாய விளையாட்டுப் போட்டி குறித்து கேள்விகள் எழுந்துள்ளன.


அடுத்த ஆண்டு ஜுலை 23ம் நாள் தொடக்கம் ஓகஸ்ட் 3ம் நாள் வரையான 11 நாட்கள், ஸ்கொட்லாந்தின் கிளாஸ்கோ நகரில், பொதுநலவாய விளையாட்டுப் போட்டிகள் நடக்கவுள்ளன.

இந்தப் போட்டிக்கு, பொதுநலவாய அமைப்பின் தலைவர் என்ற வகையில், சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச ஸ்கொட்லாந்து வந்தால், கிளாஸ்கோ பொதுநலவாய விளையாட்டுப் போட்டிகளை பல நாடுகள் புறக்கணிக்கலாம் என்று மன்னிப்புச்சபையின் ஸ்கொட்லாந்து பிரிவு உள்ளிட்ட பரப்புரையாளர்கள் எச்சரிக்கை செய்துள்ளனர்.

அடுத்த ஆண்டு கோடைகாலத்தில், சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச ஸ்கொட்லாந்து வந்தால், போர்க்குற்றச்சாட்டுகள் மற்றும் மனிதஉரிமை மீறல்கள் பற்றிய தொடர்ச்சியான கேள்விகளைத் தவிர்க்க முடியாது என்று, நிழல் வெளிவிவகாரச் செயலர் டக்ளஸ் அலெக்சான்டர் தெரிவித்துள்ளார்.

மனித உரிமை மீறல் விகாரத்தில், சிறிலங்காவுக்கு எதிராக பிரித்தானியா கடும் போக்கை கடைப்பிடிக்கத் தொடங்கியுள்ள நிலையில், ஸ்கொட்லாந்தில் அடுத்த ஆண்டு நடக்கவுள்ள பொதுநலவாய விளையாட்டுப் போட்டிகளில், சிறிலங்கா அதிபர் பங்கேற்பது இப்போது கடும் சர்ச்சையாக உருவெடுக்கத் தொடங்கியுள்ளது.

ad

ad