புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

7 டிச., 2013

சுவிஸ் ராகம் கரோக்கே  வழங்கும் இந்த ஆண்டின் இன்னிசை மாலை 

ஆண்டு தோறும் இறுதி காலப் பகுதியில் அனைத்து கலைஞர்களையும் ஒருங்கிணைத்து நடாத்தும் சுவிஸ் ராகம் கரோக்கே இசைக்குழுவின் இன்னிசைமழை எதிர்வரும் 7 ஆம் திகதி மாலை 4 மணிக்கு
பேர்ன் பும்பிளிச் ஸ்டேர்ன் மண்டபத்தில் சிறப்பாக நடைபெற உள்ளது.சுவிஸ் ராகம் கரோக்கே இசைக்குழு சுவிஸ் வாழ் தமிழ் மக்களிடையே   பலத்த ஆதரவை பெற்று இயங்கிவருவதொடு ஐரோப்பிய ரீதியிலும் தனது  இசைப்பணியை  ஆற்றி வருகிறது. ஆரம்ப காலத்தில் இசைக்கருவிகளை கொண்டு பல இசைக்குழுக்கள் இசை நிகழ்ச்சிகளை நடத்தி வந்தபோதும் காலம் செல்ல செல்ல அவை பெரும் சிரமத்தை எதிர்கொண்டு காணமல் போயின.ஒத்திகை பார்ப்பதற்கான இட வசதி,செலவு ,கருவிகளின் செலவு ,தொழில் நுட்ப வசதிகள் ,நுட்ப திறமையீனம் ,போதிய வருவாய் இல்லாமை போன்ற காரணங்களால் அவை செயல் இழந்து போயின. இந்த இக்கடான காலகட்டத்தில் தான்  எமது இசைப்பசியைத் தீர்க்கவென இலகு முறையில் இந்த கரோக்கே  இசைக்குழு ஆரம்பமாகியது ஆரம்பத்தில் இதுவும் பல்வேறு சிரமங்களை எதிர  நோக்கினாலும் பின்னர் அபரிதமான வளர்ச்சியை கண்டு இன்று சுமார் நானூறு   நிகழவுகளை தாண்டிய  சிறப்பை பெற்றுள்ளது . ஏராளமான கலைஞர்களுக்கு வாய்ப்பு கொடுத்து வளர்த்ததோடு சுவிசின் முன்னணி அதி உயர் தொழில்நுட்பத்திலான சிறந்த ஒலியமைப்பு வசதியையும் கண்டுள்ளது .பாடல் தெரிவுகள்,நீண்ட ஒத்திகை,ஒழுங்கு,ரசிகர்களை கவரும் பண்பு என பல்வேறு காரனங்களால் இக்குழு மென்மேலும் சிறப்புற்று வளர்கின்றது . ஆண்டுக்கொருமுறை நடத்துகின்ற இந்த இன்னிசைமழை கூட வித்தியாசமாகவும் சிறப்பான ஒத்திகையின் கருக் கூட்டலாலும் சிறப்புற அமைவது கண்கூடு . குழுவின் இன்னிசை நிகழ்வோடு சின்னமலை குழுவின் அற்புதமான  கும்புடுறேன் சாமி என்னும் நாடகமும் பல்வேறு நடன நிகழ்வுகளும் கூடி வரவிருக்கின்றன

ad

ad