புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

7 டிச., 2013

மூதூர் படுகொலை தொடர்பில் இலங்கைக்கு எதிராக சர்வதேச விசாரணைகளை நடாத்த முயற்சி!- இராணுவம்
ஏ.சீ.எப் தன்னார்வ தொண்டர் படுகொலைச் சம்பவம் தொடர்பிலான விசாரணைகளின் அடிப்படையில் இலங்கைக்கு எதிராக சர்வதேச விசாரணைகளை நடாத்தும் முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருவதாக சிறீலங்கா இராணுவப் பேச்சாளர் ருவான் வணிகசூரிய தெரிவித்துள்ளார்.
2006ம் ஆண்டு திருகோணமலை மூதூர் பிரதேசத்தில் ஏ.சீ.எப் நிறுவனத்தின் 17 தன்னார்வ தொண்டர்கள் படுகொலை செய்யப்பட்டிருந்தனர்.
இந்தக் கொலைகளை படைத் தரப்பினரே மேற்கொண்டதாக பிரெஞ்சு நிறுவனமான ஏ.சீ.எப் தெரிவித்துள்ளது.
இதற்கான ஆதாரங்கள் இருப்பதாகவும் சர்வதேச விசாரணைகள் நடத்தப்பட்டால் அவற்றை சமர்ப்பிக்க முடியும் எனவும் குறிப்பிட்டுள்ளது.
ஏழு ஆண்டுகள் வரையில் சாட்சியங்களை மறைத்து வைத்திருக்க வேண்ணடிய அவசியம் என்ன என இராணுவப் பேச்சாளர் கேள்வி எழுப்பியுள்ளார்.
உரிய முறையில் விசாரணை நடாத்த தேவையான சாட்சியங்களை வழங்காது, குற்றச்சாட்டுக்களை அடுக்குவதில் பயனில்லை என அவர் தெரிவித்துள்ளார்.
குற்றச் செயல்கள் தொடர்பில் பக்கச்சார்பற்ற விசாரணைகள் நடத்தப்படும் என அவர் தெரிவித்துள்ளார். 

ad

ad