புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

7 டிச., 2013

தமிழர் பேரவையின் உறுப்பினர்களுக்கும் பிரித்தானியா எதிர்க்கட்சி தலைவருக்கும் இடையில் சந்திப்பு
பிரித்தானியா எதிர்க்கட்சி தலைவர் எட் மிலிபெண்ட் அவர்களை கடந்த வெள்ளிக்கிழமை தமிழர் பேரவை உறுப்பினர்கள் சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்.எதிர்வரும் மார்ச் மாதம் ஐநா வில் நடைபெற இருக்கும் மனித உரிமைகள் மகாநாடு மற்றும் இலங்கையில் நடைபெற்று முடிந்த பொதுநலவாய மகாநாடு தொடர்பாகவும், தொடர்ச்சியாக இலங்கை அரசினால் தமிழ் மக்கள் மீது நடத்தப்படும் இனப் படுகொலை தொடர்பாகவும் இந்த சந்திப்பில் கலந்துரையாடப்பட்டது.
இந்த சந்திப்பில் எட் மிலபான்ட்,
தமிழ் மக்கள் மீது நடத்தப்பட்ட போர்க்குற்றம் தொடர்பான சர்வதேச விசாரணைக்கு மார்ச் மாதம் வரை உலக நாடுகள் பொறுமை காக்ககூடாது எனவும், போர்க்குற்றம் புரிந்த இலங்கை ஜனாதிபதியின் தலைமையில் பொதுநலவாய மகாநாடு நடைபெற்றது மிகவும் கவலைக்குரியது என்றும் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தினார்.
மேலும், இலங்கையில் தமிழ் மக்கள் மீது தடத்தப்பட்ட போர்க்குற்றத்திற்கு சர்வதேச விசாரணை வரும் வரை தொடர்ந்து தமது கட்சி குரல் கொடுக்கும் என்றும் கூறினார்.
சம காலத்தில் பிரித்தானியா பேரவையின் உறுப்பினர்கள் ரோதார்ஹம் தொழில் கட்சி பாராளுமன்ற உறுப்பினர் சாரா செம்பியன் (Saara Champian) அவர்களையும் சந்தித்து தொடர்ச்சியாக தமிழ் மக்கள் மீது இலங்கை அரசினால் மேற்கொள்ளப்படும் இனபடுகொலை பற்றி கலந்துரையாடினார்கள். இவரும் தம்ழர்களுக்கான அனைத்துக் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் அமைப்பில் (APPGT) தம்மை இணைத்துக் கொண்டுள்ளார்.
கடந்த 15ம் திகதி இலங்கையில் நடைபெற்ற கொமன்வெல்த் மகாநாட்டில் பல சர்வதேச ஊடகங்கள் பங்கு பற்றியதும் இவ் ஊடகங்களில் பல, தமிழ் மக்கலுக்கு நடந்த கொடுமைகளை சர்வதேசத்திற்கு எடுத்து கூறியதும் யாவரும் அறிந்தது.
மேலும், அதன் பின் அவர்களை ஸ்ரீலங்கா புலனாய்வு பிரிவினர் தொடர்ச்சியாக கடுமையான விசாரணைகளுக்கு உட்படுத்தி வருதல், மற்றும் வெள்ளை வான் கடத்தல் சம்மந்தமாகவும் கலந்துரையாடப்பட்டது. மனித உரிமை மீறல்கள் தொடர்பில் தமிழ் மக்களுக்குத் தனது உறுதியான ஆதரவைத் தெரிவித்துக் கொண்டார்.

ad

ad