புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

23 டிச., 2013

வட மாகாண சபையின் வரவு-செலவுத் திட்டத்திற்கு ஆளுநர் சந்திரசிறி அங்கீகாரம் .முதலமைச்சருக்கு முதல் வெற்றி 
வட மாகாண சபையின் 2014ம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தை ஏற்றுக்கொண்டு  வட மாகாண ஆளுநர் ஜி. ஏ. சந்திரசிறி நேற்று முன்தினம் கையொப்பமிட்டு உத்தியோகபூர்வமாக அங்கீகாரம் வழங்கியுள்ளார்.  
வட மாகாண சபையில் 2014ம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் கடந்த 11ம் திகதி முதலமைச்சர் சி. வி. விக்னேஸ்வரனினால் சபைக்கு சமர்ப்பிக்கப்பட்டு விவாதங்களுக்குப் பின்னர் சபையினால் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டிருந்தது.
மாகாண சபையினால் அங்கீகரிக்கப்பட்ட வரவு- செலவுத் திட்டத்தின் வரைபு தயாரிக்கப்பட்டு அனுமதிக்காக பிரதம செயலாளருக்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்தது. பிரதம செயலாளர் திருமதி விஜயலட்சுமி ரமேஸினால் சிபாரிசு செய்யப்பட்ட வரவு செலவுத் திட்டத்தை வட மாகாண ஆளுநர் ஜி. ஏ. சந்திரசிறி நேற்று முன்தினம் கையொப்பமிட்டு உத்தியோகபூர்வமாக அங்கீகாரம் வழங்கியுள்ளார்.
இந்த அங்கீகாரத்தின் பிரதி மாகாண பிரதம செயலாளர் அலுவலகத்தின் உயர் அதிகாரி ஒருவரினால் நேற்று ஞாயிற்றுக்கிழமை வட மாகாண சபை தவிசாளரிடம் கையளிக்கப்பட்டது.
இதனை தொடர்ந்து ஆளுநரின் அங்கீகாரம் பற்றிய வர்த்தமானி அறிவித்தலை வெளியிடுவதற்கான நடவடிக்கைகள் வடமாகாண சபை செயலகம் மேற்கொண்டு வருவதாக தவிசாளர் தெரிவித்தார்.
அத்துடன், வட மாகாண சபையினால் கோரப்படும் போக்குவரத்து மற்றும் வீடமைப்பு திணைக்களங்களை உருவாக்குவதற்கான முடியுமான ஆலோசனைகளையும் ஒத்துழைப்புக்களையும் வழங்குமாறு நிதியமைச்சின் கீழ் இயங்கும் முகாமைத்துவ சேவைகள் திணைக்களத்திற்கு எழுத்து மூலமான கோரிக்கை ஒன்றை அனுப்பி வைத்துள்ளதாக ஆளுநர் அலுவலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இரு திணைக்களங்களை உருவாக்குவது தொடர்பிலும் அதற்கான நியதிச் சட்டங்களை உருவாக்குவது தொடர்பிலும் உரிய நடவடிக்கை எடுக்குமாறு மாகாண சபைக்கு ஆளுநர் ஆலோசனைகளை வழங்கியுள்ளார்.
இந்நிலையிலேயே மேற்படி இரு பிரிவுகளையும் அதிகார சபையாகவோ திணைக்களமாகவோ நிறுவுவது தொடர்பில் தேவையான ஒத்துழைப்பை மாகாண சபைக்கு வழங்குமாறு நிதியமைச்சின் முகாமைத்துவ சேவைகள் திணைக்களத்திற்கு ஆளுநர் எழுத்து மூலமான கோரிக்கையை விடுத்துள்ளார்.

ad

ad