நில மோசடி புகார்! சோனியா காந்தி மருமகன் மீது விசாரணை கமிஷன் அமைக்க பா.ஜ.க. எம்.பி.க்கள் கடிதம்!
ராபர்ட் வதேரா இதற்காக பணம் எதையும் செலவு செய்யவில்லை. ரியல் எஸ்டேட் நிறுவனங்களே முன்பணம் கொடுத்துள்ளன என்றும், குறிப்பாக ராஜஸ்தானிலும், அரியானாவிலும், டெல்லியிலும் இத்தகைய பரிவர்த்தனைகள்
அதிகளவில் நடைபெற்றன எனவும் குற்றச்சாட்டு எழுந்தது.
ராஜஸ்தானில் அசோக் கெலாட் தலைமையிலான காங்கிரஸ் கட்சியின் ஆட்சி நடந்தபோதும், டெல்லியில் ஷீலா தீட்சித் தலைமையில் காங்கிரஸ் கட்சியின் ஆட்சி நடந்தபோதும், இந்தகைய முறைகேடுகள் பெருமளவில் நடைபெற்றதாக புகார் எழுந்தது.
அரியானாவில் புபேந்தர் சிங் ஹுடா தலைமையில் காங்கிரஸ் கட்சியின் ஆட்சி இப்போது நடந்து வருகிறது. ராபர்ட் வதேராவின் செயல்பாடுகள் குறித்து விசாரிக்க முற்பட்ட ஐ.ஏ.எஸ். அதிகாரி அசோக் கெம்கா திடீரென மாற்றம் செய்யப்பட்டார்.
இந்தநிலையில் பாஜக எம்பிக்கள் ரவிசங்கர் பிரசாத், அர்ஜுன்மெக்வல், ஜே.பி.நட்டா, புபேந்தர் யாதவ், ராஜேந்திரஅகர்வால் ஆகியோர் ராஜஸ்தான் முதல்வர் வசுந்தரா ராஜேசிந்தியாவுக்கு கூட்டாக கடிதம் எழுதியுள்ளனர்.
அதில், ராபர்ட் வதேராவின் நில மோசடிகளை துல்லியமாக விசாரிக்கவும், அதன் அடிப்படையில் உரிய நடவடிக்கை மேற்கொள்ளவும் ஏற்பாடு செய்யுமாறு கேட்டுக்கொண்டுள்ளனர்.
மேலும், ராபர்ட் வதேரா விவகாரம் குறித்து விசாரிக்க உடடினயாக விசாரணை கமிஷனை அமைக்க வேண்டுமென்றும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.