தேவயானி விவகாரம்! கூடுதல் பாதுகாப்பு கோரி ஐ.நா.,விற்கு இந்தியா கடிதம்! அமெரிக்காவே முடிவு செய்யும்?
இதனைதொடர்ந்து, தேவயானியை, ஐ.நா.,விற்கான தூதரக அதிகாரியாக நியமித்து மத்திய அரசு உத்தரவிட்டது.
இந்நிலையில், தேவயானியை, ஐ.நா.,வுக்கான தூதரக அதிகாரியாக நியமித்து அதற்குரிய அந்தஸ்தை வழங்குமாறு, ஐ.நா., பொதுச்செயலாளர் பான் கி மூனுக்கு, ஐ.நா.,வுக்கான இந்திய தூதர்
அசோக் முகர்ஜி கேட்டுக்கொண்டுள்ளார்.இந்நிலையில், தேவயானியை, ஐ.நா.,வுக்கான தூதரக அதிகாரியாக நியமித்து அதற்குரிய அந்தஸ்தை வழங்குமாறு, ஐ.நா., பொதுச்செயலாளர் பான் கி மூனுக்கு, ஐ.நா.,வுக்கான இந்திய தூதர்
மேலும் அவர், தூதரக அதிகாரிக்குரிய சலுகைகளையும், பாதுகாப்பையும் அளிக்கும்படி கேட்டுக்கொண்டுள்ளார். இதுதொடர்பான ஆவணங்களை அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சகமும் பரிசீலிக்க உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இதுகுறித்து பதில் அளித்துள்ள ஐக்கிய நாடுகள் சபை, இந்தியாவின் விண்ணப்பம் பரிசீலிக்கப்பட்டு வருவதாக கூறியுள்ளது.
ஆனால், சலுகையும் பாதுகாப்பும் அளிக்கும் அதிகாரம் ஐ.நா.வுக்கு இல்லை என்று கூறப்படுகிறது. ஐ.நா. தலைமையகத்துடன் செய்துகொண்ட ஒப்பந்தத்தின்படி அதில் பணிபுரியும் அதிகாரிகளுக்கு வழங்கப்படும் பாதுகாப்பு குறித்து அமெரிக்காவே முடிவு செய்யும் என தெரிகிறது.