புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

23 டிச., 2013

பாலியல் தொல்லை என பெண் ஊழியர் புகார்: பிரபல தமிழ் தொலைக்காட்சியின் ஆசிரியர் சென்னையில் கைது
சென்னை போரூர் பகுதியில் வசிப்பவர் தினேஷ்குமார். இவர் வானகரத்தில் உள்ள தனியார் தொலைக்காட்சி நிறுவனத்தில் தலைமை செய்தி ஆசிரியராக பணியாற்றினார். இதே தொலைக்காட்சியில் வண்டலூர்
ஓட்டேரி விரிவாக்க பகுதியைச் சேர்ந்த மோகனா உதவி ஆசிரியராக பணியாற்றினார்.

இந்தநிலையில் மோகனா, கோயம்பேடு போலீஸ் உதவி ஆணையர் செந்தில்குமாரிடம், தினேஷ்குமார் தனக்கு பாலியல் தொந்தவு கொடுத்ததாக புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். 
பின்னர் சென்னை மதுரவாயல் போலீசார் தினேஷ்குமாரை சனிக்கிழமை நள்ளிரவு சென்னையில் உள்ள அவரது வீட்டுக்கு சென்று கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட அவர், பூந்தமல்லி கோர்ட்டில் ஆஜர்படுத்தபபட்டார். பின்னர் அவரை ஜனவரி 3ஆம் தேதி வரை காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து அவர் புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.
பாலியல் தொல்லை கொடுத்ததை கண்டித்தும், தினேஷ்குமார் தொடர்ந்து தொந்தரவு செய்ததாகவும், இதனால் கடந்த மாதம் ராஜினாமா செய்ததாகவும், அதன் பிறகும் தினேஷ்குமார் போனில் டார்ச்சர் செய்துள்ளார் என்றும் மோகனா போலீசாரிடம் தெரிவித்துள்ளார். 
இந்த கைது விவகாரம் தொடர்பாக விளக்கம் அளித்துள்ள அந்த தமிழ் தொலைக்காட்சி நிர்வாகம், 'அந்த பெண் அளித்த பொய்யான புகாரின் அடிப்படையில் எங்கள் தொலைக்காட்சியின் ஆசிரியரை போலீசார் கைது செய்துள்ளனர்.
எங்கள் தொலைக்காட்சியில் செய்து வந்த வேலையில் இருந்து நிறுத்தப்பட்ட பின்னரே அவர் போலீசில் புகார் அளித்துள்ளார். இந்த புகாரின் நம்பகத்தன்மையைப் பற்றி ஆராயாமல் போலீசார் அவரை கைது செய்துள்ளனர்' என கூறியுள்ளது

ad

ad