பாராளுமன்றத் தேர்தலை மையமாக வைத்து நெல்லை, தூத்துக்குடிக்கு ராஜ்யசபா பதவி! அதிமுகவினர் கருத்து!
வழக்கத்துக்கு மாறாக 4 எம்.பி. பதவியும் நெல்லை மற்றும் தூத்துக்குடி பகுதிக்கு வழங்கப்பட்டதை கட்சித் தொண்டர்கள் ஆச்சரியத்துடன் பார்த்தார்கள். இவர்கள் 4 பேரும் தென்மாவட்டங்களில் அதிகமாக வசிக்கும் பிள்ளைமார் சமூகம் மற்றும் தேவேந்திரகுல வேளாளர், தேவர், நாடார் சமூகத்தைச் சேர்ந்தவர்கள். இவர்கள் சார்ந்த சமூகத்திற்கு ஒரு அங்கீகாரம் கொடுப்பதோடு, எதிர்வரும் பாராளுமன்றத் தேர்த-ல் அந்த சமுதாய மக்களின் வாக்குகளை மையமாக வைத்தும் மாநிலங்களவை உறுப்பினர் பதவி தரப்பட்டுள்ளதாக கட்சி தொண்டர்களிடையே பரவலாக பேசப்படுகிறது.
கடந்த ராஜ்யசபா தேர்தலின்போது, தூத்துக்குடியைச் சேர்ந்த மாநில மாணவரணி செயலாளரும், பிள்ளைமார் சமூகத்தைச் சேர்ந்தவருமான சரவணப்பெருமாள் வேட்பாளராக அறிவிக்கப்பட்டு பின்னர் நீக்கப்பட்டார். தற்போது அந்த சமூகத்தைச் சேர்ந்த ஒருவருக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளதாகவும் அக்கட்சியினர் தெரிவிக்கின்றனர்.