புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

15 ஜன., 2014

2013-ம் ஆண்டின் சிறந்த கால்பந்து வீரராக ரொனால்டோ தேர்வு

உலகின் சிறந்த கால்பந்து வீரரைத் தேர்வுசெய்து ஆண்டுதோறும் கால்பந்து சம்மேளனம் கௌரவித்து வருகின்றது. 2013-ம் ஆண்டின் சிறந்த வீரருக்கான இறுதிப் பட்டியலில் லயனல் மெஸ்சி(அர்ஜென்டினா), கிறிஸ்டியானோ ரொனால்டோ(போர்சுகல்), பிராங்க் ரிபெரி(பிரான்ஸ்) ஆகியோர் இருந்தனர். இவர்களில் கிறிஸ்டியானோ ரொனால்டோ சென்ற ஆண்டின் சிறந்த வீரராக ஏக மனதாக ஞாயிற்றுக்கிழமை தேர்ந்தெடுக்கப்பட்டார்.

கடந்த 2008 ஆம் ஆண்டில் இந்த விருதினை ஒருமுறை பெற்றிருந்த ரியல் மேட்ரிட் அணி வீரரும் போர்ச்சுகலின் நம்பிக்கை நட்சத்திரமுமான கிறிஸ்டியானோ(28) தான் தேர்வு செய்யப்பட்டது அறிந்து உணர்ச்சிப் பெருக்கில் மகிழ்ந்தார். கடந்த நான்கு ஆண்டுகளாகத் தொடர்ந்து தேர்வு பெற்ற லயனல் மெஸ்சியின் சாதனைக்கு இவரின் தேர்வு முற்றுப்புள்ளி வைத்துள்ளது. இந்த ஆண்டு பிபா தேர்வில் ரொனால்டோ 27.99 சதவிகித வாக்குகளையும், லயனல் மெஸ்சி 24.72 சதவிகித வாக்குகளையும், பிரான்க் ரிபெரி 23.36 சதவிகித வாக்குகளையும் பெற்றுள்ளார்கள்.

தனது அணியினருக்கும் குடும்பத்தினருக்கும் தான் முதலிடம் பெற்றது குறித்து ரொனால்டோ நன்றி கூறினார். இதற்காக தான் நிறைய தியாகங்கள் செய்ததாகக் கூறிய ரொனால்டோ தன் மீது நம்பிக்கை வைத்த அனைவருக்கும் நன்றி தெரிவித்தார். குறிப்பாக மறைந்த போர்ச்சுகல்லின் முன்னாள் கால்பந்து வீரரான யுசுபியோவிற்கும், தென் ஆப்பிரிக்கத் தலைவர் நெல்சன் மண்டேலாவிற்கும் இதன்மூலம் அஞ்சலி செலுத்துவதாக அவர் குறிப்பிட்டார். 

ad

ad