புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

15 ஜன., 2014

மன்னார், திருக்கேதீஸ்வரம் மனித புதைகுழி நாளை மீண்டும் தோண்டப்படவுள்ளது
மன்னார் திருக்கேதீஸ்வரம் பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள மனித புதைகுழி நாளை வியாழக்கிழமை மன்னார் நீதவான் முன்னிலையில் மீண்டும் தோண்டப்படவுள்ளதாக தீர்மானிக்கப்பட்டுள்ளது.
மன்னார் நீதவான் ஆனந்தி கனகரட்ணம் மற்றும் அனுராதபுர சட்ட வைத்திய நிபுணர் டி.எல்.வைத்தியரட்ண ஆகியோர் முன்னிலையில் 6 வது தடவையாக கடந்த 7 ம் திகதி காலை 8 மணிமுதல் மாலை 2.30 மணிவரை குறித்த மனித புதைகுழி தோண்டப்பட்டு மனித எலும்புக்கூடுகள் மீட்கப்பட்டன.
இதன்போது மீட்கப்பட்டிருந்த 6 மனித எழும்புக்கூடுகளில் ஒரு எலும்புக்கூட்டில் உள்ள கைப்பகுதியில் 'தாயத்து' ஒன்று கட்டப்பட்ட நிலையில் கண்டு பிடிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதுவரை மீட்கப்பட்டுள்ள 32 மனித எலும்புக்கூடுகள் முழுமையாகவும், சில மனித எலும்புக்கூடுகள் துண்டு துண்டுகளாகவும் உள்ளன.
அப்பகுதியில் மேலும் மனித எலும்புக்கூடுகள் இருக்கலாம் என்ற எதிர்பார்ப்புடன் அருகில் உள்ள காட்டு மரங்களும் தற்போது வெட்டப்பட்டு வருகின்றன.
மீண்டும் நாளை மன்னார் நீதவான் முன்னிலையில் மனித புதை குழி தோண்டப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ad

ad