புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

15 ஜன., 2014

இலங்கைக்கு எதிராக மேற்குலக நாடுகள் அணி திரண்டுள்ளன!- சிங்கள ஊடகம்
இலங்கைக்கு எதிராக மேற்குலக நாடுகள் அணி திரண்டுள்ளதாக சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.எதிர்வரும் மார்ச் மாதம் ஜெனீவாவில் நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை மாநாட்டின் பொது இலங்கைக்கு எதிராக செயற்பட மேற்குலக நாடுகள் அணி திரண்டுள்ளன.
பொதுவான அரசியல் நிகழ்ச்சி நிரல் ஒன்றின் அடிப்படையில் மேற்குலக நாடுகள் செயற்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இலங்கைக்கு எதிராக மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுக்களை சுமத்தி, நாட்டின் ஸ்திரத்தன்மைக்கு குந்தகம் ஏற்படுத்த முயற்சிக்கப்பட உள்ளது.
மேற்குலக நாடுகளின் கைபபொம்மையாக இலங்கையை மாற்றியமைப்பதே இதன் நோக்கமாகும்.
இந்த சவால்களை எதிர்நோக்க அரசாங்கம் தயாராகி வருகின்றது.
இலங்கை நேச நாடுகளின் ஒத்துழைப்பைப் பெற்றுக்கொள்ள உத்தேசித்துள்ளது.
சர்வதேச மன்னிப்புச் சபை, மனித உரிமை கண்காணிப்பகம் ஆகியவற்றின் ஒத்துழைப்பைப் பெற்றுக்கொள்ள மேற்குலக நாடுகள் முயற்சித்து வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
மார்ச் மாதம் 26ம் திகதி பத்தாயிரம் சொற்களைக் கொண்ட விசேட அறிக்கை ஒன்றை மனித உரிமை ஆணைக்குழுவின் ஆணையாளர் நவனீதம்பிள்ளை சமர்ப்பிக்கவுள்ளார்.

ad

ad