புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

15 ஜன., 2014

ராஜ்யசபா தேர்தல் : அதிமுகவுக்கு 5 எம்.பிக்கள் வாய்ப்பு
6-வது உறுப்பினர் தேர்வில் இழுபறி
ராஜ்யசபா என்று அழைக்கப்படும் மாநிலங்கள் அவைக்கு இந்தியா முழுவதிலும் இருந்து 238 உறுப்பினர்கள் அந்தந்த மாநில சட்டசபை உறுப்பினர்களால் 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை
தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள்.


ராஜ்யசபாவில் தமிழ்நாட்டை சேர்ந்த 18 உறுப்பினர்களுக்கு இடம் உண்டு. இவர்களின் பதவிக்காலம் 6 ஆண்டுகள். இவர்களில் ஒவ்வொரு 2 ஆண்டுக்கும் ஒருமுறை 6 பேர் சட்டசபை எம்.எல்.ஏ.க்களால் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள்.
அப்படி தேர்ந்தெடுக்கப்பட்ட காங்கிரஸ் கட்சியை சேர்ந்த மத்திய மந்திரி ஜி.கே.வாசன், முன்னாள் மத்திய மந்திரி ஜெயந்தி நடராஜன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியை சேர்ந்த டி.கே.ரங்கராஜன், அ.தி.மு.க.வை சேர்ந்த பாலகங்கா, தி.மு.க.வை சேர்ந்த ஜின்னா, வசந்தி ஸ்டான்லி ஆகியோரின் பதவிக்காலம் வருகிற ஏப்ரல் 2–ந்தேதியோடு முடிகிறது.
இவர்களுக்கு பதிலாக 6 புதிய உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் வருகிற பிப்ரவரி 7–ந்தேதி நடக்கும் என தேர்தல் கமிஷன் அறிவித்துள்ளது.
இந்த தேர்தலில், பொதுவாக ஒரு உறுப்பினரை தேர்ந்தெடுக்க 34 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு தேவை.
அந்த வகையில், அ.தி.மு.க.வை தவிர வேறு எந்தக் கட்சிக்கும் 34 உறுப்பினர்கள் இல்லை என்பதால் தங்கள் சொந்த பலத்தை கொண்டு எந்தக் கட்சியாலும் ஒரு எம்.பி.யை தேர்ந்தெடுக்க முடியாது என்கிற நிலை இருக்கிறது.
இப்போதுள்ள கட்சி நிலவரப்படி, அ.தி.மு.க. 5 உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பதற்கான வாய்ப்பு இருக்கிறது. சட்டசபையில் தற்போது அ.தி.மு.க.வுக்கு சபாநாயகரையும் சேர்த்து 151 எம்.எல்.ஏ.க்கள் இருக்கிறார்கள். தி.மு.க.வுக்கு 23 உறுப்பினர்களும், தே.மு.தி.க.வுக்கு 28 உறுப்பினர்களும் இருக்கிறார்கள். தே.மு.தி.க.வில் 7 பேர் அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் ஆவார்கள்.
இது தவிர, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சிக்கு 10 உறுப்பினர்களும், இந்திய கம்யூனிஸ்டு கட்சிக்கு 8 உறுப்பினர்களும், காங்கிரஸ் கட்சிக்கு 5 உறுப்பினர்களும், பாட்டாளி மக்கள் கட்சிக்கு 3 உறுப்பினர்களும் இருக்கிறார்கள். மனிதநேய மக்கள் கட்சி மற்றும் புதிய தமிழகம் கட்சிக்கு தலா 2 உறுப்பினர்களும், அகில இந்திய பார்வர்டு பிளாக்குக்கு ஒரு உறுப்பினரும் உள்ளனர்.
அ.தி.மு.க., கூட்டணி கட்சிகளோடு சேர்ந்து 5 இடங்களில் எளிதில் வெற்றி பெற்றாலும், உபரியாகவும் சில ஓட்டுகள் இருக்கும்.  ஆனால், தே.மு.தி.க.வோ, தி.மு.க.வோ, தனியாக நின்றால் ஒரு இடம் கூட வர முடியாது. ஆக, 6–வது உறுப்பினர் தேர்வில்தான் இழுபறியாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு, தமிழ்நாட்டில் நடைபெற்ற டெல்லி மேல்–சபை தேர்தலிலும் இதே நிலைமைதான் காணப்பட்டது. அப்போது, அ.தி.மு.க. சார்பில் 4 உறுப்பினர்கள் தேர்ந்து எடுக்கப்பட்டனர்.
5–வது இடத்துக்கு, அ.தி.மு.க. ஆதரவுடன் இந்திய கம்யூனிஸ்டு கட்சி வேட்பாளர் டி.ராஜா தேர்ந்து எடுக்கப்பட்டார். 6–வது இடத்துக்கு, காங்கிரஸ், புதிய தமிழகம், மனிதநேய மக்கள் கட்சி ஆகியவற்றின் ஆதரவுடன் தி.மு.க. வேட்பாளர் கனிமொழி தேர்ந்து எடுக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

ad

ad