மோதரை கடலில் நீராடிய இரு இளைஞர்கள் பலி
இதேவேளை உப்புவெளி நிலாவெளி கடலில் நீராடிய போது நீரில் மூழ்கிய இரு பெண்கள் கரையோர பாதுகாப்பு அதிகாரிகளால் மீட்கப்பட்டுள்ளனர்.
மோதர பகுதியில் நீராடிய பிரசாத் (17 வயது), யோகேஷ்வரன் (19) ஆகிய இருவரே நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளனர். உப்புவெளி கடலில் மூழ்கியபோது மீட்கப்பட்ட இரு பெண்களும் திருகோணமலை ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். நண்பர்களுடன் சுற்றுலா வந்த போதே இந்த அசம்பாவிதம் இடம்பெற்றுள்ளது.