புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

6 பிப்., 2014

வெளிநாட்டு நிதி பெற்றது பற்றி விளக்கம் அளிக்குமாறு வழக்கு: கெஜ்ரிவாலுக்கு டெல்லி ஐகோர்ட் நோட்டீஸ்
வெளிநாடுகளில் இருந்து நன்கொடை பெற்றது தொடர்பாக முழு விபரங்களை அளிக்கக் கோரி தொடரப்பட்ட வழக்கில் பதில் மனு தாக்கல் செய்யுமாறு டெல்லி உயர்நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. 
ஆம் ஆத்மி கட்சி விதிமுறைகளை மீறி வெளிநாடுகளில் இருந்து பல கோடி ரூபாய் நன்கொடை பெற்றதாக
, குற்றச்சாட்டு எழுந்தது. இதுதொடர்பாக ஆம் ஆத்மி கட்சியிடம் விளக்கம் கேட்டு மத்திய அரசு நோட்டீஸ் அனுப்பியது. ஆனால் ஆம் ஆத்மி கட்சி அதனை கண்டுகொள்ளவில்லை.

இந்தநிலையில் இந்த விவகாரம் குறித்து டெல்லி உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு ஒன்று தொடரப்பட்டது. இந்த வழக்கை புதன்கிழமை விசாரித்த டெல்- உயர்நீதிமன்றம், ஆம் ஆத்மி கட்சிக்கும், அதன் தலைமை ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கும் பதில் மனு தாக்கல் செய்யுமாறு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டது. வரும் 28ஆம் தேதிக்குள் பதில் அளிக்குமாறு அந்த நோட்டீசில் தெரிவிக்கப்படுள்ளது.

ad

ad