புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

27 மார்., 2014


7 பேரின் விடுதலையை எதிர்த்த வழக்கு:
நீதிபதி சதாசிவம் கருத்து
 

ராஜூவ்காந்தி கொலை வழக்கில் 7 பேரை விடுதலை செய்ததை எதிர்த்து  மத்திய அரசு தொடர்ந்த வழக்கில் உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு வாதிட்டது. ராஜீவ் கொலைவழக்கில் 7 பேரை
விடுவிக்க மாநில அரசுக்கு அதிகாரம் உள்ளது; மாநில அரசு 7 பேரை விடுவிக்கலாம் என்று உச்ச நீதிமன்றமே கூறியுள்ளது என்று வாதிட்டது. மேலும் இவர்கள் விடுதலை செய்வது குறித்து மத்திய அரசுக்கு கடிதம் அனுப்பினோம் என்றும் தமிழக அரசு விளக்கம் அளித்தது.


முன்னதாக, ’’முருகன்,சாந்தன்,பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை தமிழக அரசு விடுதலை செய்யக்கூடாது. அரசியல் சாசனப்படி 7 பேரையும் விடுவிக்க மாநில அரசுக்கு அதிகாரமில்லை.  
தண்டிக்கப்பட்டவர்கள் மனு அளிக்கமலேயே 7 பேரை விடுவிக்க தமிழக அரசு முடிவு செய்தது தவறு’’ என்று   ராஜீவ்காந்தி கொலை வழக்கில் உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசின் தலைமை வழக்கறிஞர் வாகன்மதி வாதம் செய்தார்.
ஒரு பக்கம் மத்திய அரசு வாதம் செய்கிறது.  மற்றோரு பக்கம் மாநில அரசு  வாதம் செய்கிறது. நாளையும் விவாதம் தொடர்கிறது.  இன்றைய விவாதத்தின் போது, குறுக்கிட்ட தலைமை நீதிபதி சதாசிவம், இந்த விவாதத்திற்கு அளிக்கப்பட கூடிய தீர்ப்பு என்பது  தமிழ் மாநிலத்திற்கு மட்டுமல்ல, இந்தியாவின் அனைத்து மாநிலங்களுக்கும் பொருந்தும்.  ஆகவே, இதில் உள்ள சட்ட நுணுக்கங்களை தெளிவு படுத்த விரும்பு கிறோம்.   இரு தரப்பும் சரியான முறையில் விவாதங்களை வைத்த பிறகு நிதானமாக தீர்ப்பு வழங்குவதே சரியானது’’ என்று குறிப்பிட்டார்.
அதன்படி மத்திய, மாநில அரசுகள் தங்கள் தரப்பு வாதங்களை நடத்திக்கொண்டிருகின்றன

ad

ad