புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

27 மார்., 2014

பிரேரணை நிறைவேற்றுவதால் இலங்கைக்கு நன்மையே ஏற்படும்- பிரிட்டன்
மனித உரிமைப் பேரவையில் இலங்கை தொடர்பில் நிறைவேற்றப்படும் தீர்மானம் இலங்கையை நன்மையையே ஏற்படுத்தும் என பிரிட்டன் வெளிவிவகார அமைச்சர் ஹியூகோ ஸ்வையர்
தெரிவித்துள்ளார்.

இலங்கை தொடர்பில் தீர்மானம் நிறைவேற்றுதல் மற்றும் விசாரணை நடாத்துவதன் மூலம் எவ்வித இலாபத்தையும் தாம் எதிர்பார்க்கவில்லை.

கடந்த நவம்பர் மாதம் இலங்கையில் நடைபெற்ற பொதுநலவாய நாடுகள் மாநாட்டின் போது போர் இடம்பெற்ற வலயங்களுக்கு விஜயம் செய்த பிரதமர் கமரூன் நிலைமைகளை நேரில் பார்வையிட்டார்.

பிரதேச மக்களுடன் பேசுவதற்கும் சந்தர்ப்பம் கிடைத்தது அத்துடன் போர்க் காலத்தில் இடம்பெற்ற சம்பவங்கள் தொடர்பில் விசாரணை நடாத்துவதன் மூலம் இலங்கை மக்களே நன்மைகளை அனுபவிப்பார்கள் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

ad

ad