புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

27 மார்., 2014


சொல்வதெல்லாம் உண்மை,வாய்மையே வெல்லும் புஜ்கள் நிர்மலா பெரியசாமி அ .தி மு க பிரசாரத்தில் உள்ளார் 
தன் கணீர் குரலால் தமிழர்களை வசீகரித்த தொலைக்காட்சி புகழ் நிர்மலா பெரியசாமி தற்போது தான் சார்ந்த கட்சிக்கான தேர்தல் பிரச்சாரத்தில் வித்யாச கெட்டப்பில் வந்து கலக்குக்கிறார்.
ஆச்சர்யமாக உள்ளதா வாசகர்களே....! இதோ இதோ உங்கள் ஐயங்களை தீர்க்கும் ஒரு பதிவு.


சிங்கார சேலத்தில் அ.தி.மு.க வேட்பாளர் பன்னீர்செல்வத்தை ஆதரித்து வாக்கு சேகரிக்க அம்மாபேட்டை காந்தி மைதானத்தில் பொதுக்கூட்டத்தில் மைக் பிடித்தார் நிர்மலா பெரியசாமி வெள்ளை உடையில் கருப்பு வெள்ளை சிவப்பு கட்டம் போட்ட அ.தி.மு.க சின்னத்தை தன் புடவையில்வரைந்துருந்தார். அதுமட்டுமா வாசகர்களே தனது விரல் நகங்களிலும் அ.தி.மு.க கொடி சின்னத்தை வரைந்துள்ளார்.


இப்படியெல்லாமுமா விசுவாசத்தை காட்டுவது?என்றதுதான் ‘ கட்சி சின்னத்தை காட்டினால் தேர்தல் கமிசன் சென்று மறைக்க சொல்லும் ஸ்டாலின் அவர்கள் தற்போது என் விரல்களை என்ன செய்வார் இதை மறைக்க சொல்ல இயலுமா ? என் உடல் பொருள் ஆவி அனைத்தும் அம்மா தான்’ என்றார் கணீரென்று...ஓ!
தனது அழகிய செல்பேசியால்(இதுவும் வெண்ணிறம் தான்) பொதுமக்களையும் விதவிதமாக படம் பிடித்துகொண்டார்.

இதில் மற்றொரு விந்தையாக ஒரு தள்ளாத பாட்டி மேடை முன் வந்து தன் இடுப்பில் சொருகியிருந்த ஒரு காகிதத்தை எடுத்து ‘உங்கள் குரலின் ரசிகை நான் எனக்கு கையெழுத்து போட்டு தாருங்கள்’ என்றார் பார்க்கலாம்...


‘இரட்டை இலை சின்னத்திற்கு ஓட்டு போட்டால் தான் கையெழுத்து’ என்று அங்கும் தனது கேன்வாசை நிறுத்தாத நிர்மலா கையொப்பம் போட்டு கொடுத்து தனக்கு வந்த சால்வையையும் அந்த முதிய பாட்டிக்கு அணிவித்து அப்ளாசை அள்ளினார்.


‘அண்ணன் விஜயகாந்த் அவர்களே தங்களை தாங்களே கருப்பு எம்.ஜி.ஆர் என அழைத்துக்கொள்குறீர்களே உலகில் ஒரே ஒரு எம்.ஜி.ஆர் தான் அவர் ரோஸ் எம்.ஜி.ஆர் தான் ‘ என சொல்லவும்  தயங்கவில்லை தொலைக்காட்சி புகழ் நிர்மலா பெரியசாமி...


ஆளும் கட்சியில் இருந்தாலும் எதிர்கட்சியினரை விமர்சித்தாலும் அண்ணன் என்றும் பெரியவர் என்றும்(கலைஞர்) மரியாதையோடு அழைத்து பொதுமக்களின் நன்மதிப்பையும் பெற்றார். மொத்தத்தில் நிர்மலா பெரியசாமியின் பிரச்சார பயணம் ஒரு புதிய பாணியின் அறிமுக பயணம்...

ad

ad