புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

25 ஏப்., 2014



ஐபிஎல் 7: கோல்கத்தா அணி 2 ரன்னில் த்ரில் வெற்றி


ஐபிஎல் சீஸன் 7ல் இன்று ஷார்ஜா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற கோல்கத்தா, பெங்களூர் அணிகளுக்கு இடையிலான போட்டியில், பெங்களூர் அணியை கொல்கத்தா அணி 2 ரன் வித்தியாசத்தில்
வெற்றி கொண்டது.
பெங்களூர் அணி டாஸ் வென்று, கோல்கத்தா அணியை பேட் செய்ய அழைத்தது.
இதை அடுத்து, முதலில் களம் இறங்கிய கோல்கத்தா அணியில் துவக்க ஆட்டக்காரர் காலிஸ், 42 பந்துகளில் 43 ரன் எடுத்தார். லைன் 31 பந்துகளில் 45 ரன் குவித்தார். உத்தப்பா 18 பந்துகளில் 22 ரன்னும், யாதவ் 18 பந்துகளில் 24 ரன்னும் எடுத்தனர். 20 ஓவர் முடிவில் கொல்கத்தா அணி 7 விக்கெட் இழப்புக்கு 150 ரன் எடுத்தது. இதை அடுத்து 151 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை பெங்களூர் அணிக்கு நிர்ணயித்தது.
பின்னர் ஆடத் தொடங்கிய பெங்களூர் அணியில் துவக்க வீரர் பட்டேல் 19பந்துகளில் 21 ரன் எடுத்தார். டக்கவாலே 28 பந்துகளில் 40 ரன் குவித்தார். பின்னர் கோலி தன் பங்குக்கு 23 பந்துகளில் 4 பவுண்டரிகளுடன் 31 ரன் எடுத்தார். நடுவரிசையில் யுவராஜ் சிங்கும் டிவில்லியர்ஸும் இணைந்து ரன் சேர்த்தனர். யுவராஜ் சிங் பந்துகளை  வீணடித்தார். அவர் 34 பந்துகளில் 31 ரன் எடுத்தார். அடுத்து வந்தவர்களும் சொற்ப ரன்களில் ஆட்டம் இழக்க, 20 ஓவர் முடிவில் பெங்களூர் அணி 5 விக்கெட் இழப்புக்கு 148 ரன்னே எடுத்தது. இதன் மூலம் கோல்கத்தா அணி 2 ரன்னில் த்ரில்  வெற்றி பெற்றது.

ad

ad