புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

25 ஏப்., 2014


தனது 8 வயது மகளை பயணப்பொதியில் மறைத்து வைத்து ஸ்பெயினுக்கு கடத்த முயன்ற மொரக்கோ நாட்டு தந்தையொருவர் சுங்க அதிகாரிகளிடம் வசமாக சிக்கிக்கொண்டுள்ளார்.
(அய்ஹாம் 38 வயது) என்ற தந்தையே இவ்வாறு தனது 8 வயது மகளான ஹனியா கனானை சிறிய பயணப்பெட்டியில் வைத்து கடத்த முயன்றுள்ளார்.
தாரிபாவிலுள்ள அன்டோலுஸியன் துறைமுகத்தினூடாக ஸ்பெயினுக்குள் பிரவேசிக்க  சட்டபூர்வ தொழில் அனுமதியை அய்ஹாம் பெற்றிருந்தார்.
 
இந்நிலையில் தனித்து வாழும் தந்தையான தனது மகளை ஸ்பெயினுக்கு அழைத்துச் சென்று அவருக்கு சிறந்த வாழ்க்கை ஒன்றை அமைத்துத்தர திட்டமிட்டார். இந்நிலையில் தாரிபா துறைமுகத்தில் அய்ஹாமால் செலுத்தி வரப்பட்ட காரை பரிசோதித்த சுங்க அதிகாரிகள் அந்த காரிலிருந்த பயணப்பெட்டியில் சிறுமியொருவர் இருப்பதைக்கண்டு அதிர்ச்சியடைந்தனர்.
 
நீண்ட காலமாக ஸ்பெயினில் பணியாற்றிய அய் ஹாம் விடுமுறையின்போது மொராக்காவிலுள்ள தனது குடும்பத்தினரைச் சந்தித்து விட்டு திரும்பும் போதே தனது மகளை ஸ்பெயினுக்கு கடத்தி வந்துள்ளார்.
 
அந்த சிறுமி பயணப் பொதியில் போதிய ஒட்சிசன் இன்மையால் மூச்சுத்திணறலுக்கு உள்ளான நிலையில் காணப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
 
இதனையடுத்து நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்ட அய்ஹாமின் வழக்கை விசாரித்த நீதிபதி அய்காம் ஸ்பெயினில் பணியாற்றும் வரை அவரது மகள் அவருடன் தங்கியிருக்கவும் ஸ்பெயினிலுள்ள பாடசாலைகளில் கல்வி கற்கவும் முடியும் எனவும் தீர்ப்பளித்துள்ளார். 
 

ad

ad