புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

25 ஏப்., 2014


Express Entry என அழைக்கப்படுகின்ற திட்டத்தின்கீழ் திறமையுள்ளவர்களுக்கு கனடாவிற்குள் நுழைவதற்கான சந்தர்ப்பம் கனிகின்றது

தொழிற்திறமையுள்ளவர்களுக்கு விரைவாகக் கனடாவிற்குள் நுழை வதற்கான சந்தர்ப்பம் வழங்கப்படவுள்ளது
என கனடியத் தொழில் அமைச்சரான கிறிஸ் அலெக்சாண்டர் தெரிவித்திருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தத் தகவலை அமைச்சர் செவ்வாய்க் கிழமை றிச்மண்ட் ஹில் பிரதேசத்தில் நடைபெற்ற பத்திரிகை மாநாடொன்றில் தெரிவித்திருக்கின்றார் என கனடியன் பிறஸ் செய்தித் தாபனம் தெரிவித்திருக்கின்றது. ஆனால் குறிப்பிட்ட இந்தத் திட்டமானது 2015ம் ஆண்டு ஜனவரி மாதமளவில்தான் நடைமுறைக்கு வரவிருக்கின்றது எனத் தெரிவித்திருக்கின்றார்.
வெளி நாடுகளில் இருந்து தொழிலாளர்களை வரவழைக்கும் திட்டத்தில் சில மாற்றங்கள் கடந்த இரு கிழமைகளுக்கு முன்பாக அறிவிக்கப்பட்டன. அத்துடன் கனடிய அரைசானது கனடிய குடியேற்ற அமைப்பில் மாற்றங்களைக் கொணடுவரும் முயற்சியினைக் கடந்த 18 மாதங்களாக செய்துவருகின்றது.
குறிப்பிட்ட தற்காலகப் பணியாளர்களை வரவைழைக்கும் திட்டமானது காலியாகவுள்ள பதவி வெற்றிடங்களை நிரப்புவதற்கு உதவும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் வேலை வாய்ப்பு இருந்தும் கனடாவில் அந்தப் பணி புரியத்தக்க பணியாளர்கள் இல்லாத நிலையில்தான் வெளியில் இருந்து இந்தத்திட்டத்தின் மூலமாக வந்த பணியாளர்கள் குறிப்பிட்ட பதவிகளுக்க அமர்த்தப்படுவார்கள் என்ற விதி கனடாவில் கடைப்பிடிக்கப்படுகிறது.
ஆனால் தற்போது தெரிவிக்கப்பட்டுள்ள விரைவுத் திட்டமானது தற்காலிக வெளிநாட்டுத் தொழிலாளர்கள் திட்டத்திலும்பார்க்க வேறுபட்ட திட்டமாக அரசினால் வரையறுக்கப்பட்டுள்ளது. தற்காலிக வெளிநாட்டுப் பணியாளர்திட்டமானது தற்போது இடைநிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. அல்லது அந்தத் திட்டம் திரும்பப்பெறும் நிலையில் உள்ளது ஆகிய இரு தன்மைகளை எதிர்நோக்கியிருக்கின்றது. கனடிய அரசானது தற்காலிக வெளிநாட்டுத் தொழிலாளர்கள் பற்றிய திட்டம் பற்றி விசாரணை நடாத்துவதுடன் அத் திட்டம் பற்றி மறு பரிசீலனையும் செய்கின்றது.
அமைச்சரின் கூற்றின்படி கனடியத் தொழில் அதிபர்கள் குறிப்பிட்ட விரைவுத் திட்டத்தின்கீழ் பணியாளர்களைக் கொணர முடியும் எனத் தெரிகிறது. ஆனால் நீண்டகாலத்திற்கான பரிசீலனையின்பின்புதான் சாத்தியமாகும் என்கின்றார். தொழிலதிபர்கள் கொண்டுவருகின்ற தொழிலாளர்கன் தற்காலிகமாகவில்லாமல் கனடாவில் குடியேறக்கூடியவராகவிருக்க வேண்டும் எனவும் அமைச்சர் தெரிவித்திருக்கின்றார்.

ad

ad