புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

25 ஏப்., 2014


பிலிம் சேம்பர் தேர்தல்: தமிழ் திரையுலகினர் புறக்கணிப்பு
இதுகுறித்து நடிகரும் தயாரிப்பாளருமான கே. ராஜன்,  ‘’தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை (பிலிம் சேம்பர்) தேர்தல் நாளை மறுதினம் (27–ந்தேதி) நடக்கிறது. இதில் எங்கள் அணி சார்பில் தலைவராக விஜயகுமார் நிற்கிறார். துணை தலைவராக நானும் செயலாளராக கமீலா நாசரும், பொருளாளராக உட்லண்ட்ஸ் வெங்கடேசும் மேலும் 16 செயற்குழு உறுப்பினர்களும் போட்டியிடுகிறோம். 
 பிலிம் சேம்பர் தேர்தலில் மோதல் ஏற்பட்டுள்ளது. தேர்தலை புறக்கணிக்க தமிழ் திரையுலகினர் திட்டமிட்டுள்ளனர். 

இந்த தேர்தல் ஜனநாயக முறைப்படி நடக்குமா என்பதில் சந்தேகம் எழுந்துள்ளது. ஒருவரே 150 ஓட்டுகள் போடும் பிராக்சி முறை மூலம் கல்யாண் ஆதரிக்கும் அணியினர் வெற்றி பெற முயற்சிக்கின்றனர். 650 பிராக்சிகளை அவர்கள் வைத்துள்ளனர். கல்யாண் தொடர்ந்து இந்த பிராக்சி முறை மூலம்தான் தலைவராக இருக்கிறார்.
கல்யாண் சினிமா நூற்றாண்டு விழா நடத்தியதில் முறைகேடு நடந்துள்ளது. விழா நடந்த நேரு ஸ்டேடியத்தை சுத்தம் செய்ய ரூ.75 லட்சம் செலவிட்டதாகவும் பிஸ்கட் வாங்க ரூ.20 லட்சம் செலவிட்டதாகவும் கணக்கு எழுதி உள்ளனர். தெலுங்கு நடிகர்களை அழைத்து வரவும் பல கோடி செலவு செய்துள்ளனர். முதல்வர் ரூ.10 கோடி கொடுத்தார், ரூ.12 கோடி வசூலானது. இவ்வளவுக்கு பிறகும் ரூ.2 கோடி நஷ்ட கணக்கு காட்டி உள்ளனர். எனவே பிலிம் சேம்பர் தேர்தலை புறக்கணிக்க தமிழ் திரையுலகினர் முடிவு செய்துள்ளோம்’’என்று கூறினார்.

ad

ad